விமர்சனம்:  C/O காதல்

2018-ம் ஆண்டு வெளியான,  ‘கேர் ஆப் கஞ்சராபலம்’  (‘C/o.Kancharapalem)   தெலுங்கு திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. எழுபது லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், ஏழு கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள ஊர் ‘கஞ்சராபலம்’.   அ:ங்கு,  நடந்த நான்கு காதல் கதைகளின் தொகுப்பே இப்படம்.

முக்கிய கதாபாத்திரங்களில் புதுமுகங்களே நடித்திருந்தனர். தவிர பிற கதாபாத்திரங்களிலும், அப்பகுதி மக்களே நடிக்கவைக்கப்பட்டு இருந்தனர்.

இப்போது அதே படத்தை தமிழில் ரீ மேக் செய்து,  ‘C/o காதல்’ என்ற பெயரில் வெளியிட இருக்கிறார்கள். படம், வரும் 12ம் தேதி வெளியாகிறது.

நடித்தவர்களில் 99 சதவிகிதம் பேர் தமிழுக்கு அன்னியமான முகங்கள்தான்.   தெலுங்கில் ரவுடி, கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் ரத்தினமும், திக்குவாய் கேரக்டரில் நடித்தவரும் தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.  மற்றவர்களில் ‘முதல் மரியாதை’ தீபன்தான் முதன்மையான ‘பழனி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இயல்பான நடிப்பு, சிறப்பான திரைக்கதை என படம் லயிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்துடன் பயணிக்கின்றன.

அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம். படக்குழுவினருக்கு பாராட்டுகள்!

 

 

 

Related Posts