’’நான் பயங்கரவாதி இல்லை’’ – கூச முனுசாமி வீரப்பன் ட்ரெய்லர்

’’நான் பயங்கரவாதி இல்லை’’ – கூச முனுசாமி வீரப்பன் ட்ரெய்லர்

தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே சொல்லும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதன் கதையை ஷரத் ஜோதியோடு இணைந்து ஜெயச்சந்திர ஹாஷ்மியும் வசந்த் பாலகிருஷ்ணனும் எழுதியுள்ளனர்.இந்த சீரிஸுக்கு  இசை சதீஷ் ரகுநாதன் அமத்துள்ளார்.

 

இத்தொடரின் ட்ரெலர் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதை சூர்யா அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரெலர் பலரது கவனத்தை ஈர்த்து வந்த்தது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

 

இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாவது ட்ரெலரை  சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நக்கீரன் ஆசிரியர், “காவிரி பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் நடந்துகிட்டது வீரப்பன் தான்… அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கிடையாது” என்கிறார். மேலும் வீரப்பன், “நான் வந்து பயங்ரவாதி அல்ல…அதாவது நியாயத்தை நிலைநாட்டுறேன்…அவ்வளவு தான்”, “இந்த மாதிரி கோழை வேலை செய்ய கூடாது அரசாங்கம்” என பேசும் ஒரிஜினல் வீடியோ இடம்பெற்றிருக்கிறது. இந்த ட்ரெலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts