ஹிட் 2 :திரை விமர்சனம்

ஹிட் 2 :திரை விமர்சனம்

அதிரடி க்ரைம் த்ரில்லராக  அசத்துகிறது ஹிட் 3.

ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டினத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிகிறார் நானி. அவரே ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் விசாரணை கைதியாக இருக்கிறார். சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியிடம் தான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்கிறார்.

இந்த ப்ளாஷ்பேக்கில், காஷ்மீரில் நடந்த ஒரு கொலை வழக்கை நானி விசாரிக்க தொடங்கும் போது, அங்கு நடந்த கொலையை போல் வெவ்வேறு இடங்களில் கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகள் எதற்காக நடக்கிறது, அதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க தனது புலன் விசாரணையை தொடங்குகிறார். இதற்காக பீகார், குஜராத், அருணாச்சலப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களுக்கு சென்று விசாரணையை மேற்கொள்கிறார்.

அர்ஜுன் சர்க்கார் ஏன் கொலை செய்கிறார், இதர கொலைகளை செய்தது யார், ஏன் வீடியோ எடுக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

அர்ஜுன் சர்க்காராக நானி. கெத் ஆக வருகிறார். கண்டிப்பான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் அவருக்கு ரொம்பவே பொருந்துகிறது.   குற்றவாளிகளை அடித்து நொறுக்கி ஆவேசம் காட்டுவது, பெண் பார்க்க போகும்போது அவர்களிடம் கடுகடுவென பேசுவது என்று கெடுபிடி குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறார். அதே நேரம், ஸ்ரீநிதி பார்த்து பிடித்துப்போய், அமைதியாக பேசி ரசிக்கவைக்கிறார்.கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ரெட்டிதான் இதிலும் நாயகி.  நாயகனின் காதலியாகவும் காவல் அதிகாரியாகவும் வருகிறார்.  டூயட் பாடுவது, காதலுக்கு ஏங்குவது எனவழக்கமான ஹீரோயின் ரோலாக அல்லாமல், கதையில்  முக்கியத்துவம் அளித்திருப்பது சிறப்பு. அதை அவர் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லனாக நடித்துள்ள பிரதீக் பாபர் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி, கோமாளி பிரசாத், ரவீந்திர விஜய், டிஸ்கா சோப்ரா, பிரதீப் பாபர் என  இதர நடிகர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்து உள்ளனர்.

மிக்கி இசையில் போராட்டமே பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது.  அதே நேரம் பின்னணி இசையில்  மிரட்டி இருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு அற்புதம். காஷ்மீர், பீகார் குஜராத் போன்ற அவுட்டோர் இடங்களானாலும், வில்லனின் பயங்கர பங்களாவானாலும் ரசிக்கவும், மிரட்டவும் வைக்கிறது இவரது கேமரா.

இயக்குநர் சலீஷ் கோலனுவின் மூன்றாவது ஹிட் படம் இது. இதுவும் ஹிட் தான். வித்தியாசம் என்னவென்றால், முந்தைய இரு படங்களில் க்ரைம் இன்வஸ்டிகேஷன்தான் இருக்கும். இதில் அதிரடி சண்டைக் காட்சிகளை அதிகப்படுத்தி உள்ளார். காரணம், முந்தைய இரு பாகங்களில்  சாதாரண நாயகர்கள். இதில் நேச்சுரல் ஸ்டார் நானி. ஆகவே அவரது ரசிகர்களுக்காக சண்டைக் காட்சிகள், ஹீரோயிசத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.

ஆகவே,  முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவே. காரணம், சண்டைக் காட்சிகளின் தொகுப்பாகிவிடுகிறது.

ஆனாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ரசிக்க வைக்கும் க்ரைம் த்ரில்லர்.

 

Related Posts