தகர்க்கப்படும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்! அதிரவைக்கும் ‘ கடைசி உலகப்போர்’ ட்ரைலர் !
தனது ஆல்பம் பாடல்கள் மூலமும் தமிழ் ராப் பாடல்கள் மூலமும் இளைஞரகள் மத்தியில் இடம் பிடித்த ஹிப் ஹாஃப் ஆதி, தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடிகர் இயக்குநர் என தனது திறமையை வெளிப்படுத்தினார். தற்போது ‘கடைசி உலகப் போர்’ என்ற திரைப்படத்தை எழுதி, இயக்குவதோடு தயாரிக்கவும் செய்துள்ளார்.
இத்திரைப் படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதிரடியான இந்த ட்ரைலரிலின் இறுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானம் குண்டு வைத்து தகர்க்கப்படுவதைப் போன்ற காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. இந்த காட்சி, நிஜமான போர்க்கள காட்சியை காண்பது போலவே உள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
டிரெய்லர்: