இதயத்தை காக்கும் நடைபயிற்சி!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஒன்று நடைபயிற்சி. நமது உடலை நோய் வராமல் பாதுகாக்க நம்மிடையே இருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்றால் அது நடைபயிற்சியாகத்தான் இருக்கும். உடல் எடை கூடிவிட்டதா? சர்க்கரை நோய் வந்துவிட்டால் மருத்துவரின் முதல் அறிவுரை நீங்கள் நடை பயிற்சி செல்லுங்கள் என்பதுதான். ஆரோக்கியமாக, அழகான உடல் கட்டு பெற நடைபயிற்சி சிறந்தது. நமது உடலில் நோய் வராமால் பாதுகாக்க வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே நடைபயிற்சி அவசியம்.
தற்போது இருக்கும் காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது சாத்தியமற்று வருகிறது. அலுவலக வேலை என்பது கணினியில் பெரும்பாலும் முடங்கிவிட்டது. எனவே வெளியில் சென்று வருவது குறைந்து’ வாகனப் பெருக்கம் நம்மை சோம்பேறியாக மாற்றிவிட்டது என்றே கூறவேண்டும். உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நடைபயிற்சி என்பது சாத்தியமற்று போனாலும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமே.
நடைபயிற்சி என்பது நமது உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. மேலும் உயர் ரத்தஅழுத்தத்தை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்கிறது. நமது ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்பு கரைபதற்கும் பெரிதும் உதவுகிறது.
நன்மைகள்;
தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வலிமையை கொடுத்து நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

தினமும் முடியாவிட்டாலும் வாரத்துக்கு இரண்டு, அல்லாது மூன்று மணி நேரமாவது நடைபயிற்சி அவசியம். இவ்வாறு செய்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என் மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுவயது முதல் நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், வயதான காலத்திலும் இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை ஆரோக்கியமாக இயங்க உதவும்.
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளில் நடைபழக்கமும் முக்கியமான ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபயிற்சி செய்யும்போது, மூளையில் இருக்கும் ஹிப்போகாம்பஸ்’ பகுதி சிறப்பாகவும், ஆரோக்கியமாக செயல்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
மூளையில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் பகுதி, நடப்பதால் ஞாபகத்திறனை அதிகரிக்கிறது. தூக்கமின்மை கோளாறு இருப்பவர்கள், மாலையில் நடைபயிற்சி செய்தால் இரவில் நிம்மதியாக நல்ல தூக்கம் வரும். நமது மனநிலையை சீர்படுத்தி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது நடைபயிற்சி.
நடக்கும் போது சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பதே நல்லது. அப்போதுதான் உடலுக்கு தேவையான `வைட்டமின் டி’ நேரடியாக உடலுக்கு கிடைக்கும். நடைபயிற்சியின் போது காலுக்கு ஏற்ற காலுறை, ஷூ அணிந்து கொண்டு நடக்க வேண்டும்.
நடக்கும் போது இருக்காமாவும், தளர்வாகவும் இல்லாமல் சரியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வது சிறந்தது.
செய்யக் கூடாதவை;
பேசிக்கொண்டே நடப்பது கூடாது.அப்படி நடப்பதால் உடலுகுத் தேவையான நடைபயிற்சி வழியாக நுரையீலுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைவும். போன் பார்த்துக் கொண்டு, பேசிக்கொண்டு நடக்ககூடாது.
வாகன போக்குவரத்து இல்லாத,ஏரி,குளம், பூங்கா போன்ற இடங்கள் ஏற்றது. புதிதாக நடபவர்கள் சிறிது, சிறித தூரத்தை அதிகப்படுத்த வேண்டும். உடனடியாக அதிகப்படுத்தினால் உடல் சோர்வு,கால்வலி உண்டாகும். காலையில் தூங்கி எழுந்த உடன் நடப்பதே சிறந்தது. சுறுசுறுப்பாக மனதை வைத்துக் கொண்டு நடக்க தயாராக வேண்டும். கைகளை நன்றாக வீசி, உடலை நிமிர்த்து வேகமாக நடக்கவேண்டும். அப்போது தான் முழுபலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
– யாழினி சோமு

