’மகா சமுத்திரம்’ சித்தார்துடன் இணையும் அனு இமானுவேல்!

அஜய் பூபதி இயக்கும் ’மகா சமுத்திரம்’ படத்தில் நாயகி இருவரில் ஒருவராக நடிக்கிறார் அனு இமானுவேல். துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை, போன்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அனு இமானுவேல்.இந்த படத்தில்  நடிகர் ஷர்வானந்த் மற்றும் சித்தார்த் நாயகனாக நடிக்கின்றனர்.

இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் தனது படத்திற்கு நடிகர்களை தேடிவந்தார்  அஜய் பூபதி. இந்த படத்தில் நாயகி ஒருவராக அதிதி ராவ்  ஹைடாரி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில’ இன்னொரு நாயகியாக நடிக்கிறார் அனு இமானுவேல்.

நடிகர்கள்: ஷர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் ஹைடாரி, அனு இமானுவேல் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

காதல் மற்றும் அதிரடியாக உருவாகும் இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுள்ளது என  இயக்குநர் அஜய் பூபதி கூறியிருக்கிறார். இவர் தெழுங்கில் ஆர்.எக்ஸ் 100 எனும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

-யாழினி சோமு

Related Posts