ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ’லப்பர் பந்து’ முதல் பாடல் வெளியீடு..!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ’லப்பர் பந்து’ முதல் பாடல் வெளியீடு..!

தமிழரசன் பச்சை முத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘லப்பர் பந்து. ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனக்கர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘அட்டக்கத்தி’ தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘வதந்தி’ வெப் தொடரில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  இவர்களுடன் பால சரவணன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு புருஷோத்தமன் ஒளிப்பதிவு ,ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

தற்போது  லப்பர் பந்து படத்திலிருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts