ஹனுமான்: பான் வேர்லட் திரைப்படம்!

ஹனுமான்: பான் வேர்லட் திரைப்படம்!

ஹனுமன் பட விழாவில் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் சைத்தன்யா தயாரிப்பில், இயக்குநர்  பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனு-மான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது

இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்,  படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்  நடிகர் வினய் பேசியதாவது:

இது தெலுங்குப்படமாக ரம்பமானது. சின்னப்படமாக தான் ஆரம்பித்தது ஆனால் ஹனுமனின் ஆசீர்வாதத்தில் இப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது.   இந்தப்படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.நடிகை அம்ரிதா ஐயர் பேசியதாவது:

இப்படத்தை தெலுங்குப்படமாக தான் ஆரம்பித்தோம், கொஞ்ச நாளில் பான் இந்தியப்படமாகி, பின்னர் இப்போது பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. இந்தப்படம் இந்திய சினிமா பெருமைப்படும் படமாக இருக்கும். ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் படமாக இருக்கும். சாதாரண பையனுக்கு அனுமனின் பவர் கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை, ஆன்மீக படமல்ல, எல்லோருக்கும் பிடிக்கும்.நடிகை வரலட்சுமி பேசியதாவது:

இந்தப்படத்தின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. எல்லோரும் கதை சொல்லும்போது, படம் இப்படி வரும் என நினைப்போம், ஆனால் நாங்கள் யாருமே நினைக்காத அளவு, இப்படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. சைத்தன்யா மேடம் பிரசாந்த் கேட்ட அத்தனையும் தந்து, இப்படத்தை மிகப்பெரிய படமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

நடிகர் தேஜா சஜ்ஜா பேசியதாவது…

ஹனுமான் படத்திற்குப் பின்னால்  மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இது தெலுங்குப்படமல்ல, நேரடித்தமிழ் படம் மாதிரி தான் இருக்கும். அதற்காக நிறைய உழைத்துள்ளோம்.

– இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

.

 

 

Related Posts