விமர்சனம்: கார்டியன்

விமர்சனம்: கார்டியன்

சின்ன வயசில் இருந்தே அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக விளங்கும் ஹன்சிகாவுக்கு திடீரென நல்ல வேலை, மகிழ்ச்சியான  வாழ்க்கை அமைகிறது.  அதற்கு என்ன காரணம் என புரியாமல் யோசிக்கும் அவருக்கு இதெல்லாம் ஒரு ஆவி தான் செய்கிறது என்பது தெரிய வருகிறது.

அந்த ஆவி பழிவாங்க துடிக்கும் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத் மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்டோரை பழிவாங்க ஹன்சிகா எப்படி உதவுகிறார் என்பது தான் கதை.ஹன்சிகா முதல் பாதி வரை துரதிர்ஷ்டத்தால் வாடும் பெண்ணாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 2ம் பாதிக்கு மேல் பேய் அவதாரம் எடுக்கும் ஹன்சிகாவின் நடிப்பு பயமுறுத்துகிறது. அவருக்கு ஜோடி வேண்டுமே என்பதற்காக பிரதீப் ராயன் வந்து போகிறார்.

ஹன்சிகாவின் நடிப்பு படத்துக்கு பலம்.  சாம் சி.எஸ். இசை ஓகே ரகம். ஒளிப்பதிவு, லைட்டிங் ஆகியவை, பேய்ப்படத்துக்கு ஏற்ற மாதிரி உள்ளது.

கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்ளான சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த ஹாரர் படம் கவர்கிறது.

 

 

Related Posts