“உறுப்பு தானம் வழங்குவோருக்கு ஆகச் சிறந்த மரியாதை!” :  தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி பாராட்டு

“உறுப்பு தானம் வழங்குவோருக்கு ஆகச் சிறந்த மரியாதை!” :  தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி பாராட்டு

சென்னை: “உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது” என தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவு அடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

தன் உறுப்புகளை கொடையாக வழங்கி, பல உயிர்களைக் காக்கும் ஈகியர்களுக்கு இதை விட சிறப்பான மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.