சூர்யாவின் ‘கங்குவா’: அதிரடி ‘க்ளிம்ஸ் வீடியோ’ வெளியீடு

சூர்யாவின் ‘கங்குவா’: அதிரடி ‘க்ளிம்ஸ் வீடியோ’ வெளியீடு

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் ‘கங்குவா’ படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகிறது.   

இந்நிலையில், படத்தின்  புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மொழிகளில் விரைவில் டீசர் வெளியாக உள்ளது.

பிரமிக்க வைக்கும் காட்சிகள், காவியத்துவமான இசை, எல்லாவற்றையும் விட சூர்யாவின் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியான திரை இருப்பு கொண்ட 2 நிமிட புரோமோ டீஸர் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது.  

 

 

 

Related Posts