தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும்  தனுஷின் 50-வது படம் ‘ராயன்’. நாயகனாக நடிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார் தனுஷ்.

சன் பிக்சபிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்,  துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது.  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புபுத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ வெளியாகி ரசிகர்கள கவர்ந்தது.

இப்படம் ஜூலை 26 -ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி, சென்னை  சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

 

Related Posts