அசரவைத்த ‘இந்தியன் 2’ பிரமோஷன்! துபாய் வான் வெளியில் பறந்த இந்தியன் கொடி!

அசரவைத்த ‘இந்தியன் 2’ பிரமோஷன்! துபாய் வான் வெளியில் பறந்த இந்தியன் கொடி!

கமல் நாயகனாக நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம், வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, இப்படத்துக்கு, வித்தியாசமான முறையில் உலகெங்கும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யு.ஏ.இ. நாட்டில், துபாய நகரி்ன் பாம் சுமைரா கடலுக்கு மேல், ஸ்கை டைவ் என சொல்லப்படும் விமானத்தில் இருந்து வான் வெளியில் குதிக்கும் சாகச நிகழ்ச்சி இந்தியன் 2 படத்துக்காக நடத்தப்பட்டது.

இந்த சாகச வீடியோ வெளியாகி உள்ளது.

“எங்க தப்பு நடந்தாலும் அங்க நா வருவேன்” என்ற கமல் பேசும் வசனம் ஒலிக்கிறது.

விமானத்தில் இருந்து குதிக்கும் ஸ்கைடைவ் வீரர்கள் இந்தியன் 2 பிரமாண்ட போஸ்டரை, மிகப்பெரும் கொடி போல.. வானில் பறக்க விட்டபடி தரையிறங்கி வருகிறார்கள்.

அசரவைக்கும் இந்த வீடியோ  சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Related Posts