யோகி பாபுவின் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

யோகி பாபுவின் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா நடிக்கும் புதிய படத்தை  ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்து உள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க,  கார்த்திக் நேதா பாடல்களை எழுதியுள்ளார்.படம் குறித்து இயக்குநர், “குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒருபுதுவித அனுபவமாக இருக்கும்” என்றார்.இந்த படத்துக்கு வானவன் என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை  ஜி.வி.பிரகாஷ்   மற்றும் மடோனா அஸ்வின் வெளியிட்டனர்.

     

Related Posts