இந்தியாவில் முதல் கமர்ஷியல் ஆங்கில படம்..!

 சையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் முதல்  லுக் ஐ வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படமாகும். இந்தப் படத்தை  தயாரித்து இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா. இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து நாம் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை இயக்கிவர்.

வினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கேங் லீடர் என்னும் தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாகவும் மற்றும் டாக்டர் என்னும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளனர். இது அவருக்கு முதல் படம்.
 ஜி.வி பிரகாஷ் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயன் படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறார். சிம்பு மற்றும் அருண்ராஜா காமராஜுரும் ஒரு பாடலை படியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோவ் இந்தியா மற்றும் ஜி. வி.கே. எம் எழிபண்ட் பிட்சர் மலேஷியா இணைந்து தயாரித்துள்ளது. கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.

Related Posts