மீண்டும் எம்.ஜி.ஆர்…!

க்களால் வாத்தியார் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்பயணத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து நடிக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவு. அவர்கண்ட கனவுக்கு அவர் உயிரோடு இருக்கும்போது என்ன காரணத்தாலோ போஸ்டர்வரை வந்து அவரால் உயிகொடுக்க முடியாமல் போனது.

அவர் இறந்து ஆண்டுகள் பல கடந்து அவரது கனவுக்கு உயிர் கொடுத்து நிறைவேற்றியிருக்கிறது சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம். எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நினைவாக்கும் விதமாக ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரிதிருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த  பணி நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது திரைப்படக்குழு. இப்பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார்.

பல வெற்றிப்படங்களில்  வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியிருக்கிறார். தவச்செல்வனின் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த ஆண்டு இந்தப் படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிட இருக்கிறது.

இந்தப் படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்குகிறது. எம்.ஜி. ஆரின் காலத்துக்கும் மறக்கமுடியாத தத்துவப்பாடல்களின் வரிசையில் இதுவும் இடம்பெரும் என்பது எந்த சந்தேகமும் இல்லை. எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட வரிகள் அருமை. இந்த பாடல் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டது படக்குழு. வந்தியத்தேவன்’ பேசப்படும்.

Related Posts