மசூதியில் நடந்த இந்து திருமணம்..!

கேரளா; கேரளா மாநிலம் ஆலப்புழா மசூதி ஒன்றில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடிகளுக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது.  இந்த சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அத்தனை மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த திருமணம்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்து இவரது கணவர் இழந்துவிட்ட சூழ்நிலையில் வறுமையில் வாடியது இவரது குடும்பம். இவருக்கு மஞ்சு என்ற மகள்’ திருமண வயது வந்தும்  பணம் இல்லாத காரணத்தால் இவரால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. பின்னர் மகளின் திருமணத்தை நடத்த உதவி செய்யுமாறு செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை கேட்டுள்ளார்.

இந்த தாயின் நிலையை அறிந்த மசூதி நிர்வாகம் உதவி கரம் நீட்டியதுமட்டும் அல்லாது, மசூதியிலேயே உங்களின் மகளின் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று நிர்வாகம் அனுமதி கொடுத்தது. அந்த தாயின்  மகள் அஞ்சுவிற்கும், சரத் என்ற இளைஞருக்கும் செருவல்லி மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி திருமணம் இனிதே முடிந்தது.

இந்த திருமணத்திற்காக வாழை மரங்கள், இரண்டு பக்கமும் நடப்பட்டன மசூதியில் பந்தல் போடப்பட்டது. இதற்கும் மேல் இந்து முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி மந்திரங்கள் ஓதியும்  திருமணம் நடைபெற்றது. நிர்வாகத்தின் சார்பில் ஜோடிகளுக்கு 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.