மாணவ, மாணவியருக்கு ரூ.20 லட்சம்!: பத்திரிகையாளர் இ.சி.ஆர். மு. சுதாகர் உதவி!
பத்திரிகையாளரும், மேன் பவர் நிறுவனம் நடத்தி வருபவருமான இ.சி.ஆர். மு.சுதாகர், தாய் தந்தையை இழந்த ஏழை மாணவ மாணவியருக்கு ரூ. 20 லட்சம் உதவி அளித்தார்.
இவர், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது LEADERS EDUCATIONAL FOUNDATION என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏராளமான ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த எட்டு வருடங்களாக தாய் தந்தையை இழந்த எழை எளிய மாணவர்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார். இந்த வருடமும், ( 2021-2022) பனிரெண்டாம் வகுப்பு படித்த 206 மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகையாக தலை ரூ.10,000 அளித்தார்.
இது குறித்து இ.சி.ஆர். மு. சுதாகர் கூறும்போது, “கேபிள் தொழில் மற்றும் மேன் பவர் நிறுவனம் நடத்தி வருகிறேன். அதேடு செய்தியாளராகவும் இருக்கிறேன்.
ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு, குறிப்பாக தாய் தந்தையை இழந்தோருக்கு LEADERS EDUCATIONAL FOUNDATION மூலம் அளிக்கிறேன். கடந்த எட்டு வருடங்களாக இந்த பணியை செய்து வருகிறேன். இது முழுக்க முழுக்க எனது வருமானத்தில் இருந்து அளிக்கும் தொகையே. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு உதவி அளிக்க விரும்புகிறேன்” என்றார்.
இ.சி.ஆர். சுதாகர், கொரனா காலத்திலும் ஏராளமான மக்களுக்கு உதவிகளைச் செய்து வந்தார். குறிப்பாக, கொரோனா காலங்களில் இருளர் இன மக்களுக்கும் முதியோர் இல்லங்களிலும் உணவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வாழ்க்கை, தனது வருமானம் என்று இல்லாமல் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவும் இ.சி.ஆர். மு.சுதாகர் பாராட்டத்தக்கவர்

