பூஜையுடன் தொடங்கியது ’எக்கோ’ படத்தின் படப்பிடிப்பு!
செனனை; கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட திரைப்படப் பணிகள் தளர்வுகளுக்கு பின் மெல்ல மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகும் படம் ‘எக்கோ’. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது
தமிழில் ‘சைவம்’ படத்தில் மூலம் அறிமுகமாகி பிறகு ‘தடம்’ உள்பட பல படங்களில் நடித்தவர் வித்யாபிரதீப். சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் சீரியல் பக்கம் போனவர் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பி இருக்கிறார். ‘பவுடர்’ என்ற படத்தில் பேயாக நடிக்கும் இவர் அடுத்து ஸ்ரீகாந்துடன் இணைந்து ‘எக்கோ’ என்ற படத்தில் நடிக்கிறார்.
காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.
ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் நேற்று சென்னை ஈச்சம்பாக்கத்தில் படமாக்கப்பட்டன எனபது குறிப்பிடதக்கது.
-யாழினி சோமு