தனுஷின் ‘ராயன்’: கலங்கடிக்கும் ‘ஓ ராயா’ பாடல் லிரிக் வீடியோ!
தனுஷ் நடிப்பில் ஜூலை 26ம் தேதி வெளியாக உள்ள ராயன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, தனுஷே இயக்கி நடிக்கிறார். பவர் பாண்டி திரைப்படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் அடுத்த படம் என்பதால் எதிர்பார்ப்பு டாப் கியரில் எகிறி உள்ளது.
அதே போல ராயன் பட பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தன. படத்தின் போஸ்டர்கள் செம மாஸாக இருந்ததால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து வெளியான டிரெய்லரும் பெரிய அளவில் ரீச் ஆனது.
படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஸ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.
இந்நிலையில் இன்று படத்தின் ‘ஓ.. ராயா’ என்ற லிரிக் பாடல் வெளியாகி உள்ளது.
டபோகும்பாதை தெரியலையே யார் தந்த விதியோ..’ என்ற பெண் குரல் மெல்லிய சோகத்துடன் பின்னணியில் ஒலிக்க… சிறுவன் ஒருவன் சிதை தீக்கு முன் நிற்கிறான். அவன் தோளில் ஒரு பெண் குழந்தை உறங்கிக் கொண்டு இருக்கிறது.
அடுத்து, ‘தூரத்தில் வரும் வெளிச்சம் நீ சொல்லும் வழியோ..’ என்ற நம்பிக்கை தரும் வரிகள் ஒலிக்கின்றன.. தொடர்ந்து, ‘சாமி உன்கிட்ட இருக்கு.. இந்த பூமி உனக்கு சொந்தமையா.. உன் கவலை எல்லாம் தூசா பறக்கட்டும் ராசா’ குரலில் நம்பிக்கை ஒலிக்க பாடல் ஒலிக்கிறது.
வறண்ட பூமியில் கிடக்கும் அரிவாள், அங்கே சிந்தியிருக்கும் ரத்தம்.. அருகிலேயே முளைக்கும் செடி… என, இந்த லிரிக் வீடியோவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
