நமித்தின் ‘ராமாயணா’: ஹாலிவுட் VFX, ஆஸ்கார் இசை.. உலகை நோக்கிப் பாயும் ராமரின் கணை!

நமித்தின் ‘ராமாயணா’: ஹாலிவுட் VFX, ஆஸ்கார் இசை.. உலகை நோக்கிப் பாயும் ராமரின் கணை!

ராமாயணம்னா அது வெறும் இதிகாச நூல் மட்டும் இல்ல பாஸ், நம்ம ஊரு திருவிழாக்கள், வாழ்க்கை நெறிகள்னு தலைமுறை தலைமுறையா நம்ம ரத்தத்துல ஊறியிருக்கிற ஒரு எபிக் காவியம்! இப்போ இந்த இந்தியக் கலாச்சாரப் பெருமையை உலக அரங்கில் மாஸாகக் கொண்டு சேர்க்கும் ஒரு மெகா அத்தியாயம் தொடங்கியிருக்கு.

வரும் ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தத் திரைப்படத்தோட அதிகாரப்பூர்வ டிரெய்லர் ரிலீஸாகப் போகுது. ஆனா, அதுக்கு முன்னாடியே நேத்து (18 ஜூலை 2026) புது டெல்லியில ‘பிரதம் சங்கல்ப்’ அப்படிங்குற பேர்ல ஒரு பிரத்யேக அறிமுக விழா நடந்து முடிஞ்சிருக்கு! ஒரு பிரம்மாண்ட காரியத்தைத் தொடங்குறதுக்கு முன்னாடி எடுக்குற உறுதிமொழிதான் ‘சங்கல்ப்’. அதேபோல, ராமாயணத்தை அதன் அசல் தன்மையோட உலகிற்கு எடுத்துச் செல்வோம்னு படக்குழு எடுத்த சபதம்தான் இந்த விழா!

ஒரே மேடையில் இந்திய சினிமாவின் பெருந்தூண்கள்!

இந்த ‘பிரதம் சங்கல்ப்’ விழாவோட ஹைலைட்டே, படத்தோட மெகா ஸ்டார் காஸ்டிங் எல்லாரும் ஃபர்ஸ்ட் டைமா ஒண்ணா மேடை ஏறுனதுதான்! இந்திய சினிமாவின் பல தலைமுறைகளை ஒரே இடத்துல பார்த்த ரசிகர்கள் சும்மா மிரண்டுட்டாங்க.

‘தங்கல்’ படம் மூலமா சீனா பாக்ஸ் ஆபீஸ் வரைக்கும் இந்தியக் கொடியை நட்டு உலகை வியக்க வச்ச இயக்குநர் நிதேஷ் திவாரி, அவரோட மெகா டீமோட என்ட்ரி கொடுத்தார்:

  • புருஷோத்தமன் ராமனாக: சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர்

  • அன்னை சீதையாக: நம்ம சாய் பல்லவி

  • அழிக்க முடியாத ராவணனாக: பான் இந்திய ராக்ஸ்டார் யாஷ்

  • அனுமனாக திடீர் என்ட்ரி கொடுத்த: சன்னி தியோல்

இதுபோக அருண் கோவில் (மன்னர் தசரதர்), ஷோபனா (கைகேயி), அஜிங்க்யா தேவ் (விஸ்வாமித்திரர்), குனால் கபூர் (இந்திர தேவன்), ரகுல் ப்ரீத் சிங் (சூர்ப்பணகை), ரவி துபே (லட்சுமணன்) என ஒரு நட்சத்திர பட்டாளமே மேடையை அலங்கரிச்சது!

ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் முதல் 20 நகரங்கள் வரை.. டிரெய்லர் சர்ப்ரைஸ்!

இந்த விழா டெல்லியில மட்டும் இல்ல, இந்தியா முழுக்க எதிரொலிச்சிருக்கு! ‘ராமாயணம் ஸ்கூல்ஸ் புரோகிராம்’ மூலமா 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள்ல லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த காவியத்தோட நெறிகளைக் கத்துக்கிட்டாங்க. அதுல செலக்ட் ஆன ஸ்டூடண்ட்ஸ் இந்த விழாவுக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்திருந்தாங்க. இதுபோக, இந்தியாவோட 20 முக்கிய நகரங்கள்ல இருக்குற குழந்தைகள், கிரியேட்டர்கள், ரசிகர்கள்னு பலருக்கும் இந்த உலகளாவிய டிரெய்லரை முன்கூட்டியே பார்க்கும் ஜாக்பாட் சான்ஸ் கிடைச்சது!

படைப்பாளிகளின் மெகா கனவு!

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா: “ராமாயணம் நம்ம வாழ்வோட ஒரு பகுதி. இருளை ஒளி வெல்லும் தத்துவத்தை தசரா, தீவாளி வழியா இது நமக்கு உணர்த்துது. ஹாலிவுட்ல பல வருஷம் ஒர்க் பண்ண அனுபவத்துல, நம்ம இந்தியக் கதைகளை உலக மேடையில பிரம்மாண்டமா சொல்லணும்னு ஆசைப்பட்டேன். இன்னைக்கு அதுக்கான பெஸ்ட் டீம், டெக்னாலஜி எல்லாமே நம்மகிட்ட இருக்கு. இது ஒரு உலகளாவிய பயணத்தோட தொடக்கம்!”

இயக்குநர் நிதேஷ் திவாரி: “இது ஏற்கனவே உலக மக்களுக்கெல்லாம் தெரிஞ்ச கதை, இதைப் புதுசா நான் உலகளாவிய கதையா மாத்த தேவையில்லை. என் பொறுப்பெல்லாம் இதை அசாத்திய மரியாதையோடும், உண்மைத்தன்மையோடும் திரையில கொண்டு வர்றது மட்டும்தான். காட்சிகளோட பிரம்மாண்டம் மட்டுமில்லாம, இதோட ஆன்மாவையும் ஆடியன்ஸ் உணர்வாங்க!”

ஹாலிவுட் VFX கூட்டணியும்.. ஆஸ்கார் இசையும்!

பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், 8 முறை ஆஸ்கார் விருது வாங்குன உலகப்புகழ் பெற்ற DNEG மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சேர்ந்து இந்த பிரம்மாண்டத்தை தயாரிச்சிருக்காங்க. இது பத்தாதுன்னு, ஆஸ்கார் நாயகர்கள் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஒண்ணா சேர்ந்து இந்த படத்துக்கு மியூசிக் போடுறாங்க பாஸ்!

DNEG நிறுவனம் ‘தி ஆடிஸி’, ‘டாக்ஸிக்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் 3’னு பல உலகத்தரமான படங்களை லைன்-அப்ல வச்சிருக்காங்க. அதுல அவங்களோட மிக முக்கியமான அசுர படைப்புதான் இந்த ‘ராமாயணம்’.

நோட் பண்ணி வச்சுக்கோங்க:

வரும் ஜூலை 24, 2026-ல ‘ராமாயணம்’ தம்பிரான் டிரெய்லர் உலகளவில் ரிலீஸாகுது! 2026 தீபாவளி ரேஸ்ல ‘ராமாயணம்: பகுதி 1’ உலகமெங்கும் தியேட்டர்கள்ல பிரம்மாண்டமா அவதரிக்கப் போகுது. தியேட்டர்கள்ல திருவிழாவுக்கு ரெடியாகிக்கோங்க!

Related Posts