மூணு தலைமுறை.. ஏழு தசாப்தங்கள்.. தேசிய விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட சத்யஜோதி பிலிம்ஸின் அசுர பாரம்பரியம்!
72-வது தேசிய திரைப்பட விருதுகள்ல, நம்ம சத்யஜோதி பிலிம்ஸ் தங்களோட வரலாற்றுப் பயணத்துல ஒரு தங்கம் பதிச்ச அத்தியாயத்தை எழுதியிருக்காங்க! அவங்களோட தயாரிப்புல தனுஷ் நடிப்பில் மிரட்டிய ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை தட்டித்தூக்கியிருக்கு. அதுமட்டும் இல்லாம, படத்துல ஆக்ரோஷமான நடிப்பை அள்ளித்தெறிச்ச தனுஷுக்கு, சிறப்பு பாராட்டு (Special Mention) விருதும் கிடைச்சு டபுள் தமாகா கொண்டாட்டமாக மாறியிருக்கு!
இந்த அசாத்திய வெற்றி சத்யஜோதி பிலிம்ஸுக்கு வெறும் விருது மட்டும் இல்ல பாஸ்; ஏழு தசாப்தங்களா, மூணு தலைமுறையா தரமான கதைகளையும் சமூகப் பொறுப்பையும் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்துட்டு வர்ற அவங்களோட ரத்தபாச பாரம்பரியத்துக்குக் கிடைச்ச கெளரவம்!
1950-களில் ஆரம்பிச்ச விருது வேட்டை!
இந்த பிரம்மாண்டமான பயணத்தோட ஆரம்பப்புள்ளி 1950-களின் இறுதியில வீனஸ் டி. கோவிந்தராஜன் தயாரிச்ச ‘கல்யாண பரிசு’ (1959) படத்துல இருந்துதான் தொடங்குச்சு. அந்தப் படம் தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வாங்கி, இந்த குடும்பத்தோட விருது கணக்கைத் தொடங்கி வச்சது.
அடுத்ததா ஆர். எம். வீரப்பன் தயாரிப்புல வந்த ‘ரிக்ஷாக்காரன்’ (1972) படத்துக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வச்சார்!
கமலஹாசனின் முதல் விருது முதல் தனுஷின் மில்லர் வரை!
இந்த லெகசியை அடுத்த லெவலுக்குக் கொண்டு போனவர் டி.ஜி. தியாகராஜன் சார். அவரோட தலைமையில சத்யஜோதி பிலிம்ஸ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமா மாறுச்சு. அவர் தயாரிச்ச ‘மூன்றாம் பிறை’ படம் சும்மா மூணு தேசிய விருதுகளை அள்ளிக்குவிச்சதோடு, உலகநாயகன் கமல்ஹாசனோட முதல் தேசிய விருதுக்கும் காரணமா அமைஞ்சது!
இப்போ, மூணாவது தலைமுறையா செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஜோடி அதே எனர்ஜியோட இந்த பாரம்பரியத்தைக் கெத்தா முன்னெடுத்துட்டு வர்றாங்க. அவங்க தயாரிச்ச ‘விஸ்வாசம்’ படம் பெஸ்ட் மியூசிக்கான தேசிய விருதை வாங்குச்சு. அப்புறம், சர்வதேச அளவுல UK National Film Awards-ல அங்கீகாரம் பெற்ற ‘கேப்டன் மில்லர்’, இப்போ 72-வது தேசிய விருதுகள்ல ரெண்டு விருதுகளை அள்ளி சத்யஜோதி பிலிம்ஸின் மைல்கல் லிஸ்ட்ல பிரம்மாண்டமா இணைஞ்சிருக்கு!
மில்லர் டீமுக்கு ராயல் சல்யூட்!
இந்த எபிக் சாதனையைச் சாத்தியமாக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனுஷ் சார் மற்றும் ஒட்டுமொத்த ‘கேப்டன் மில்லர்’ தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தங்களோட மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்கிறாங்க. தங்களோட இந்த 70 வருஷப் பயணத்துல மக்களை என்டர்டெய்ன் பண்றது மட்டுமில்லாம, சிந்திக்க வைக்கிற படங்களைக் கொடுக்கணும்ங்குற எண்ணம்தான் இன்னைக்கும் அவங்களை வழிநடத்துது.
இந்த ரெண்டு தேசிய விருதுகளும் சத்யஜோதி பிலிம்ஸின் கடந்த கால சாதனைகளைக் கொண்டாடுறது மட்டுமில்லாம, இன்னும் இன்னும் தரமான படங்களை உருவாக்க அவங்களுக்குக் கிடைச்ச செம பூஸ்ட்!
