‘இதயம் முரளி ரியூனியன்’ தேங்ஸ் மீட்: நினைவுகளின் சங்கமம்! ஃபுல் கவரேஜ்!
டான் பிக்சர்ஸ் தயாரிப்புல, ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து மற்றும் இயக்கத்துல, நம்ம அதர்வா முரளி செம கியூட்டா நடிச்சு ரிலீஸான படம் தான் “இதயம் முரளி”. கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்கள்ல ரிலீஸாகி, ரசிகர்கள் மத்திலயும் சரி, கிரிடிக்ஸ் மத்திலயும் சரி.. சும்மா பாராட்டுக்களை அள்ளிக்குவிச்சு தட்டித்தூக்கியிருக்கு இந்தத் திரைப்படம்!
இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த லவ் ஸ்டோரியை உலகமெங்கும் ரிலீஸ் பண்ணி, தியேட்டர்களை திருவிழா கோலமா மாத்தியிருக்காங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான குஷியில, ஒட்டுமொத்த படக்குழுவும் ஒண்ணா சேர்ந்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை நேர்ல சந்திச்சு தங்களோட மனமார்ந்த நன்றியை செம எனர்ஜியா பகிர்ந்துட்டாங்க!
சின்னி ஜெயந்த்: இன்றைய தலைமுறை பழைய நினைவுகளை மறந்துட்டு ஓடுறாங்க. ஆனா, அந்த நாஸ்டால்ஜியா உணர்வுகளை அழகா மீட்டெடுத்து ஸ்கிரீனுக்குக் கொண்டு வந்திருக்கார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். அதர்வா கூட நடிச்சப்போ அவரோட அப்பா முரளி கூட நடிச்ச அதே ஃபீல் கிடைச்சது! யூடியூப் இன்ஃப்ளூயன்சர்கள், புதுமுகங்கள், சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு எல்லாரையும் ஒண்ணா இணைச்சு ஒரு தரமான இந்தி படம் பார்த்த ஃபீலிங்கைக் கொடுத்துட்டார். தமனுக்குள்ள ஒரு நல்ல நடிகரும் இருக்கார்!
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா: இயக்குநராவும் தயாரிப்பாளராவும் ஒரே நேரத்துல ஜெயிச்சிருக்கார் ஆகாஷ். படத்துல ஒரு கேசட், கோக் கேன் வச்ச இடத்துல கூட மைக்ரோ டீட்டெய்லிங் அள்ளுது. ஒளிப்பதிவாளர்கள் மனோஜ், சாய் பங்களிப்பு அசாத்தியமானது. மாஸ் படங்களுக்கு மியூசிக் போடுற தமன் சார், ‘ஈரம்’ மாதிரி இந்த உணர்வுப்பூர்வமான படத்துக்கும் பின்னிட்டாரோ இல்லையோ! அதர்வா சாரோட 15 வருஷ ஃபிட்னஸும் ஒழுக்கமும் செம இன்ஸ்பிரேஷன். சுதாகர் தியேட்டர்ல சும்மா அதிரவிடுறார்!
திங் மியூசிக் சந்தோஷ்: இசை தமன்னு தெரியாமலே பாடல்களோட ஸ்கிராட்ச் டிராக்கை கேட்டு மிரண்டுட்டேன். படத்துல சொன்னபடியே ஏழு பாடல்களையும் முழுசா பயன்படுத்தியிருக்கார் இயக்குநர். இந்த வருஷம் அதிகமா ஸ்ட்ரீம் ஆகுற ஆல்பமா இது இருக்கும். அதர்வாவோட முதல் படம் ‘பாணா காத்தாடி’ ஆல்பத்தையும் நாங்கதான் ரிலீஸ் பண்ணோம். இப்ப ‘இதயம் முரளி’ மூலமா இது எங்களுக்கு ஒரு சூப்பர் ‘முரளி ரீயூனியன்’!
எழுத்தாளர் ரமணகிரிவாசன்: பெரிய படங்களுக்கு பக்கம்பக்கமா வசனம் எழுதுவோம். ஆனா அஞ்சு வார்த்தை வந்தாலும் அது கதைக்குத் தேவையா இருக்கணும்னு ஆகாஷ் தெளிவா இருந்தார். ‘நாயகன் ஏன் காதலை சொல்லலை?’ங்குற கேள்விக்கு ஒன்றரை வருஷமா பதில் தேடி, கடைசியில டிரெய்லர்ல வச்ச வசனம் தான் — “காதலை சொல்ல முடியவில்லை… அதை ஏன் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்ல முடியவில்லை”. காலேஜ் பிரண்ட்ஸ் நாலு பேர் ஒண்ணா சேர்ந்து வேலை செஞ்ச பாஸிடிவ் எனர்ஜிதான் இந்த வெற்றி!
பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா: தமன் சார் மியூசிக் டைரக்டரா மட்டுமில்லாம ஜாலியான அண்ணன் மாதிரி பழகினார். குறிப்பா ‘வாமா வாமா’ பாட்டுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை நெகிழ வச்சிடுச்சு!
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா: இயக்குநர் ஆகாஷை நாங்க செல்லமா ‘ஹெட்மாஸ்டர்’னுதான் கூப்பிடுவோம். 2018-ல இருந்தே இந்தக் கதைக்காகப் போராடி, பட்ஜெட்ல சமரசம் செய்யாம பிரம்மாண்ட செட் போட்டு உழைச்சிருக்கார். தமன் தெலுங்குல பிஸியா இருந்தாலும் அவர் உள்ளே வந்ததும் படம் ஸ்பீடு எடுத்துச்சு. ஹீரோயின்கள் ரெண்டு பேரும் செம அர்ப்பணிப்போட நடிச்சிருக்காங்க. அதர்வாவுக்கு கிடைக்க வேண்டிய தகுதியான வெற்றி இது!
இசையமைப்பாளர் எஸ். தமன்: நெருக்கமான நண்பர் தீபன் மூலமா CGI, 2D காட்சிகள் கலந்த கான்செப்ட் டிரெய்லரைப் பார்த்தவுடனே, இந்த படத்துக்கு நானே மியூசிக் பண்றேன்னு ஆகாஷ்கிட்ட போய் நின்னேன். ‘தங்கமே’ பாட்டுல ஆரம்பிச்சது இந்த ஜெர்னி. மனோஜ் வற்புறுத்தலை தட்ட முடியாமதான் படத்துல நடிச்சேன். செட்ல ரக்ஷனும் டிராவிட்டும் கொடுத்த டார்ச்சர் செம ஜாலி. டப்பிங்ல அதிகமா பேசி லேட் பண்ணிட்டாங்க!
நடிகர் மதன்: 80’ஸ் கிட்ஸ் மனசுல இருக்குற கிளாசிக் படம் ‘இதயம்’. அந்த பேரை தலைப்பா வச்ச இந்த படத்துல ஒரு முக்கியமான கேரக்டர் பண்ணது செம ஹாப்பி!
நடிகர் நட்டி: படத்துல எல்லாருக்குமே சரியான கதாபாத்திரங்கள் அமைஞ்சிருக்கு. கிருஷ்ணா, ஜோஜோ உள்ளிட்ட தயாரிப்புக் குழு செம சப்போர்ட். ஹோல் டீமும் ஒரே பாஸிடிவ் எனர்ஜியோட வேலை செஞ்சதுதான் படத்துல பிரதிபலிக்குது.
மாதம்பட்டி ரங்கராஜ்: ஆகாஷோட கல்யாண விருந்தோ, படத்தோட கல்யாண விருந்தோ, இல்ல இந்த சக்சஸ் மீட் விருந்தோ.. எல்லாத்துலயும் என்னை மறக்காம கூப்பிடுற அவரோட நட்புக்கு நன்றி. அதர்வா பிரதர் இன்னும் பெரிய உயரங்களை தொடணும்.
நடிகை எஸ்.எஸ்.வி: மேடையில பேச பதற்றமா இருந்தாலும், அதர்வா, ப்ரீத்தி, டிராவிட்னு எல்லாரோடவும் ஸ்கிரீனை ஷேர் பண்ணது மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ்.
நடிகை மோனிஷா: ‘இதயம் முரளி’ மூலமா சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தது ரொம்ப சந்தோஷம். நான் ஒர்க் பண்ண பெஸ்ட் டீம் இதுதான். எல்லாரும் தியேட்டர்ல போய் பாருங்க!
நடிகர் & வசன எழுத்தாளர் டிராவிட்: என் லைஃப்பை ‘இதயம் முரளிக்கு முன், இதயம் முரளிக்கு பின்’னு பிரிக்கலாம். யூடியூபரா இருந்த என்னை சினிமாக்காரனா மாத்தின படம் இது. அதர்வா முதல் நாளே பிரண்ட்லியா பழகினார். மனோஜ் சார்தான் எங்களுக்கு ரியல் ‘ஹெட்மாஸ்டர்’. என்னை நடிகரா மட்டுமில்லாம, அசிஸ்டென்ட் டைரக்டராவும், டயலாக் ரைட்டராவும் நம்பி சுதந்திரம் கொடுத்த ஆகாஷ் சாருக்கு கடமைப்பட்டிருக்கேன். மாதம்பட்டி ரங்கராஜும், பகத் சாரும் சின்ன கேரக்டர்ல வந்து மாஸ் காட்டியிருக்காங்க!
நடிகர் ரக்ஷன்: நண்பர்கள் சேர்ந்து படம் பண்ணுவாங்க. ஆனா நாங்க படம் பண்ணிட்டு நண்பர்களா மாறிட்டோம். ஷூட்டிங் போறதுக்கு முந்தின நாள் நைட்டுதான் ஆகாஷ் எனக்கு போன் பண்ணார். அடுத்த நாள் காலையில செட்டுக்கு போயிட்டேன். மனோஜ் சாரோட பிரேம்ல ஒரு மூலையில நான் இருக்குறதே பெருசு. தமன் அண்ணன் செட்ல கொடுத்த எனர்ஜி செம. நான் ஸ்கிரீன்ல கம்மியா பேசியிருந்தா அதுக்கு தமன் அண்ணன்தான் காரணம்!
நடிகர் சுதாகர்: காமெடி கேரக்டர் மட்டும்தான் பண்ணணுமான்னு யோசிச்ச டைம்ல வந்த சான்ஸ் இது. நான் ரொம்ப அமைதியானவன், ஆனா செட்ல எல்லாரும் என்னை அவங்கள்ல ஒருத்தனா மாத்திட்டாங்க. டிராவிட் எழுதின வசனங்களும், எங்க ரெண்டு பேரோட டிஸ்கஷனும்தான் காமெடி சீன்ஸ் நல்லா வர காரணம். படம் முடிஞ்சதேன்னு வருத்தமா இருக்கு, ஆகாஷ் சீக்கிரம் அடுத்த படத்தை ஆரம்பிக்கணும்!
நடிகை கயாது லோகர்: நான் கமிட்டான முதல் தமிழ் படம் இது. ‘அமுதா’ கதாபாத்திரத்தோட அப்பாவித்தனமும் மனவலிமையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆரம்பத்துல எனக்கு ‘சாம்’ கேரக்டரும், ப்ரீத்திக்கு ‘அமுதா’ கேரக்டரும்தான் யோசிச்சிருந்தாங்க, ஆனா கடைசியில எல்லாம் சரியா அமைஞ்சது. தமன் சார் எனக்கு ஒரு பியானோ கிப்ட் பண்ணார். ப்ரீத்தி எனக்கு இந்த இண்டஸ்ட்ரியில ஒரு க்ளோஸ் பிரண்ட். அதர்வாவுடன் குறைவான சீன்ஸ் இருந்தாலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கு. படத்த எல்லாரும் தியேட்டர்ல போய் பாருங்க!
நடிகை ப்ரீத்தி முகுந்தன்: கதை கேட்ட ஃபர்ஸ்ட் செகண்டே பிடிச்சுடுச்சு. எனக்கு ‘சாம்’, ‘அமுதா’ ரெண்டு கேரக்டர்ல எதை வேணாலும் செலக்ட் பண்ற சாய்ஸ் கொடுத்தார் டைரக்டர். முடிவெடுக்க செம கஷ்டமா இருந்தது! ஆனா ஸ்கிரீன்ல பார்க்கும்போது ஒரு ரசிகையா படத்தை என்ஜாய் பண்ணேன். மனோஜ் சார் கிட்ட ‘எப்படி சார் எல்லா பிரேமையும் ஓவியம் மாதிரி மாத்துறீங்க?’னு கேட்டேன். அந்த அளவுக்கு காட்சிகள் கவிதை!
செட்ல ஏஞ்சலின் செம மெச்சூர்டு, டிராவிட் நீ இன்னும் பெரிய உயரத்துக்கு போவ, ரக்ஷன் போகப் போக என்னை உங்க கேங்ல சேர்த்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ். சுதாகர்.. தியேட்டர்ல உங்க கேரக்டருக்குத்தான் நான் அதிகமா கத்துனேன்! கயாது, வெளில நம்மள ஒப்பிட்டு பேசினாலும் நாம எப்பவும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் தான். அதர்வா சார்.. நான் பார்த்ததுலயே ஆகச்சிறந்த மனிதர், அவ்ளோ பணிவு! தமனின் மியூசிக் தான் இந்த படத்தோட ஆன்மா.
நடிகர் அதர்வா முரளி: பள்ளி வாழ்க்கை முடிஞ்சு கடைசி நாள்ல பிரண்ட்ஸ் எல்லாரும் மீட் பண்ணா எப்படி இருக்கும்? அப்படி ஒரு ‘ரீயூனியன்’ ஃபீலிங்ல தான் இப்போ இருக்கேன்! இன்றைய காலத்துல இப்படி ஒரு லவ் ஸ்டோரியை தயாரிக்க முன்வந்த ஆகாஷுக்கு பெரிய தேங்க்ஸ். மனோஜ் சார் சொன்ன மாதிரியே எல்லாரையும் லட்டு மாதிரி அழகா காட்டியிருக்கார்.
செட்டுக்கு எப்பவும் காலியான மனசோட தான் போவோம், அங்கேயே ஸ்பாட்ல டயலாக் மாத்தி தன்னிச்சையா நடிச்ச சீன்ஸ் தான் படத்துல அதிகம். நாங்க டப்பிங் பேசினது மட்டுமே நாலு மணி நேரத்துக்கு மேல இருந்தது, அதை எடிட்டிங் டேபிள்ல ரெண்டரை மணி நேரமா செதுக்கின எடிட்டர் பிரதீப்புக்கு ஒரு சல்யூட்! தமன் சார் பிஸியா இருந்தாலும் செட்ல ஜாலியா இருந்தார். எப்ப டவுட் வந்தாலும் ‘ப்ளாக்பஸ்டர்.. ப்ளாக்பஸ்டர்!’னு சொல்லி எங்களுக்கே பயங்கர நம்பிக்கை கொடுத்தார்.
படம் முடிஞ்சதும் ‘இதயம் முரளி’ வாட்ஸ்அப் குரூப்ல ஆகாஷ் ஒரு மெசேஜ் போட்டார்.. ‘சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல என்ன பண்றதுன்னே தெரியல, படம் முடிஞ்சதேனு வெறுமையா இருக்கு’னு. அந்த அளவுக்கு இது குடும்பம் மாதிரி ஆகிடுச்சு. ஷூட்டிங் இல்லாத அன்னைக்கும் ரக்ஷன் லஞ்ச் சாப்பிட செட்டுக்கு வந்துடுவார்! ‘இதயம் முரளி’ தலைப்பு முதல்ல செட் ஆகுமானு பயந்தேன், ஆனா என் அப்பா முரளிக்கு ஒரு நண்பனா ஆகாஷ் கொடுத்த சூப்பர் மரியாதை தான் இந்த படம்!
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்: தியேட்டர்ல படம் பார்த்தவங்க ‘எங்க ஸ்கூல், காலேஜ் டேஸை ஞாபகப்படுத்திட்டீங்க’னு மெசேஜ் அனுப்புறாங்க, அதைவிட பெரிய அவார்டு எதுவும் இல்ல! அதர்வா சார் ஆரம்பத்துல இருந்தே என் எல்லா ஏற்ற இறக்கங்கள்லயும் கூடவே நின்னார். மனோஜ் சார் பெரிய படங்கள் பண்ணியிருந்தாலும், நம்ம சின்ன படத்துக்கும் அதே அர்ப்பணிப்போட ஒர்க் பண்ணிக் கொடுத்தார். தமன் சார் ஹைதராபாத், மும்பைனு எங்க போனாலும் ‘இதயம் முரளி’யைப் பத்தியே பெருமையா பேசி பயங்கர சப்போர்ட் பண்ணார்.
என் பிரண்ட் சாய் ஒளிப்பதிவாளரா மட்டும் இல்லாம, புரொடக்ஷன், எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர், அசிஸ்டென்ட் டைரக்டர்னு மல்டி டாஸ்க் பண்ணி அசத்திட்டான். கார்த்திக்கோட ஆர்ட் ஒர்க்கும், பல்லவியோட காஸ்ட்யூமும் படத்தோட அழகைக் கூட்டுச்சு. கபிலனின் போஸ்டர்ஸ், சுரேனின் சவுண்ட் மிக்ஸிங் எல்லாமே தரம்! ரமணகிரிவாசன் சார் வசனங்கள்ல செம வடிவத்தைக் கொடுத்தார்.
இந்த படத்துல பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தினதுல செம ஹேப்பி. கயாது லோகரை இன்ஸ்டாகிராம்ல பார்த்து கூட்டிட்டு வந்தோம், இன்னைக்கு பெரிய ஹீரோயின்! நிஹாரிகா, ப்ரீத்தி, மோனிஷா, ஏஞ்சலின் எல்லாரும் சூப்பரா நடிச்சிருக்காங்க. டிராவிட்ட ஆக்டரா தான் கூப்பிட்டேன், ஆனா ரைட்டிங், அசிஸ்டென்ட் டைரக்ஷன்னு ஆல்-இன்-ஆல்-அழகுராஜாவா நின்னுட்டான். படம் ரிலீஸ் ஆகி இன்னைக்கு தியேட்டர்கள்ல வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு, எல்லாருக்கும் நன்றி!
