திருப்பதி மொட்டை இல்லடா.. திருப்பி அடிக்கிற மொட்டை!: தனுஷ் அதிரடி!

திருப்பதி மொட்டை இல்லடா.. திருப்பி அடிக்கிற மொட்டை!:  தனுஷ் அதிரடி!

நடிகர் தனுஷ், சமீபத்தில் தனது மகன்களுடன் திருப்பதி சென்று மொட்டை அடித்துக்கொண்டார். இது வேண்டுதலுக்கான மொட்டை என்று அனைவரும் நினைத்திருக்க.. அடுத்த படத்தின் கெட்அப்பும் இதுதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வரும்  தனுஷ், அடுத்து சேகர் கம்முலா,  மாரி செல்வராஜ் இயக்கும் படங்கள், மற்றும் இந்தியில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். 

இந்நிலையில்,  ஐம்பதாவது படத்தை – டி 50-  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கிறார்.

இந்நிலையில், இப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளதாக ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதில் மொட்டை கெட்டப்புடன், சண்டைக்குத் தயாராகும் தோரணையில் கெத்-ஆக நிற்கிறார்  தனுஷ். தவிர ரத்த நிறமும் கவனத்தை ஈர்க்கிறது.

ஆக, ‘இது திருப்பதி மொட்டை இல்லடா.. திருப்பி  அடிக்கிற மொட்டை’ என சொல்லாமல் சொல்கிறார் தனுஷ்.

இது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related Posts