ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்! வனிதா பகீர் புகார்
நேற்று பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்ட, நடிகை வனிதா, “பீட்டர் பாலின் மனைவி என்னிடம் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டுகிறார்!” என்று குற்றம்சாட்டி உள்ளார்.
நடிகை வனிதா விஷூவல் எடிட்டரான பீட்டர் பால் என்பவரை, நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். இது வனிதாவுக்கு மூன்றாவது திருமணம்; பீட்டருக்கு இரண்டாவது திருமணம்.
இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில், பீட்டர்பால் தன்னை சட்ட ரீதியாக விவாகரத்து செய்யாமல், வனிதாவை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளி்த்தார்.
இந்நிலையில், வனிதா, தெரிவிக்கும்போது, “எட்டு வருடங்களுக்கு முன்னரே, பீட்டர் அவரை பிரிந்து வந்துவிட்டார். தவிர நானும் பீட்டரும் காதலிப்பது ஏற்கெனவே ஹெலனுக்கு தெரியும் தவிர, பீட்டரும் நானும் திருமணம் செய்துகொள்ளப்போகும் தகவல், கடந்த ஒரு வாரமாகவே மீடியாவில் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் வேண்டுமென்றே, திருமணம் முடிந்தவுடன் புகார் செய்திருக்கிறார்.
அவர் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு ஹெலன் மிரட்டினார். அதற்கு நாங்கள் உடன்படாததால், இப்போது புகார் அளித்திருக்கிறார். இதை இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
நான் ஏற்கனவே இதுபோன்று நிறைய பிரச்சினைகளை சந்தித்துவிட்டேன். இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். இது எனக்கும் பீட்டருக்குமான வாழ்க்கையை பாதிக்காது. நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்!” என தெரிவித்துள்ளார்.