‘டியர் ரதி’: திரை விமர்சனம்

‘டியர் ரதி’:  திரை விமர்சனம்

நாயகன் சரவண விக்ரம், பெண்கள் என்றாலே காத தூரம் ஓடுபவர்.  அதனால் இரு காதல் தோல்விகள்.  பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவரது நண்பர் பாலியல்   தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை அறிமுகப்படுத்துகிறார். அவர் மீது ம் நாயகனுக்கு  ஈர்ப்பு வருகிறது.  இருவரும் இணைந்து ஒரு நாள் முழுக்க செலவழிக்க திட்டமிட்டு பயணத்தைத் துவங்குகிறார்கள்.

ஆனால் நாயகி  ஹஸ்லி அமானை பெரும் கூட்டம் ஒன்று தேடித் தொடர்கிறது.

ஏன் இப்படி தொடர்கிறது.. நாயகி யார் என்பதே  கதை.

நாயகன் சரவண விக்ரம், இயல்பாக நடித்து இருக்கிறார். ஏற்கெனவே,  தொலைக்காட்சி தொடரில் நடித்த அனுபவம்  கைகொடுத்து இருக்கிறது.  பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி ஹஸ்லி அமான், கண்களால் கவர்கிறார்.  பாத்திரத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காமெடித்தனம் கலந்த வில்லனாக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன், தனது குழுவினர்  சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார். காட்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவராஜ் சுப்பிரமணியம் ஆகியோர் புதியவர்களாக இருந்தாலும், ஓகே தான்.லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு வண்ணங்களை இன்னும் மெருகூட்டி காட்டி இருக்கிறது.  எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள்சுமார். ஆனால் , பின்னணி இசை ஈர்க்கிறது.

பிரேம்.பி யின் எடிட்டிங் கச்சிதம்.

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி,  வித்தியாசமான கதையம்சத்தால் ஈர்க்கிறார்.

ரேட்டிங் 3.8/5

Related Posts