பட்டையை கிளப்புது தர்பார் பாடல்.. ட்ரண்டிங்கில் ’’சும்மா கிழி’’ மாஸ்அப் வீடியோ!

சென்னை; நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் தர்பார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி ,நிவேதா தாமஸ் ,யோகி பாபு, தம்பி ராமையா, ஶ்ரீமன் ,பிரட்டேக் பாபர் ,ஜட்டின் சர்னா ,நவாப் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாடலான ‘சும்மா கிழி’ பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிக பெரிய டிரென்ட் ஆகிவருகின்றது.

இந்த பாடலை எஸ்.பி.பி மற்றும் அனிரூத் பாடியிருக்கின்றனர். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் வரிகள் அமைத்திருந்தார். இந்த பாடல் இனணயத்தில் வெளியானது முதல் டிரெண்டிங்கில் நம்பர் 1னாக சும்மா கிழி பாடல் இருந்துவருகிறது. இந்த பாடல் தமிழில் வெளியாகிய அதே நேரத்தில் தெலுங்கிலும் ’’தும்மு தோலி’’ என்ற பெயரில் வெளியானது.

தமிழில் மட்டும் மல்ல அல்லாது தெலுங்கிலும் இந்த பாடல் பட்டையைகிளப்பி 23லட்சத்திற்கும் அதிகமான பார்வையிட்டுள்ளனர்.

ரீமிக்ஸ் என்ற யூடியூப் பக்கத்தின் சார்பில் “சும்மா கிழி” பாடல் தமிழின் அனைத்து முன்னனி நடிகர்களை வைத்து மிக்ஸ் செய்யபட்டு பதிவேற்ற பட்டிருக்கிறது. இதில் ரஜினி,விஜய் ,அஜித்,சூர்யா, விக்ரம் ,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடிய வீடியோக்களை சும்மாகிழி பாடலுடன் இணைத்து வீடியோவை எடிட் செய்து அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிள்ளார்.

 “சும்மாகிழி”மாஸ்அப் வீடியோ இணையத்தில் வைரலாகி செம கிழிகிழினு கிழிக்குது.

 

அனைத்து நடிகர்களின் மாஸ்அப் வீடியோவான தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலை அனிரூத் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த “சும்மா கிழி சாங்க்” செம ட்ரண்டிங்கில் இருக்கிறது.

இந்த வீடியோவை செம்மயா’’ எடிட் செய்த எடிட்டருக்கு   வாழ்த்துகள் கூறி பதிவிட்டுள்ளார்.

மரண மாஸ் ஆனே சும்மா கிழி’’…

Related Posts