மனதிடம் குறையாத ப.சிதம்பரம்! வரவேற்க தமிழகத்தில் ஆல் இல்லை…
டெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு மற்றும் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ப. சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியதை அடுத்து நேற்றிரவு சிறையிலிருந்து வெளியே வந்தார் சிதம்பரம்.
திஹார் சிறையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரவேற்பதற்கு தமிழகத்திலிருந்து பெரியளவில் ப.சி ஆட்கள் வரவில்லை. இதன் காரணமாக கார்த்தி சிதம்பரம் டெல்லியில் இருக்கக்க கூடிய காங்கிரஸ்காரர்களை வைத்து ப.சிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு திஹார் சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக அங்கு திரண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்கள் மட்டுதான். தமிழகத்தில் இருந்து அவர் எதிர்பார்த்தப்படி யாரும் பெரியளவில் டெல்லிக்கு செல்லவில்லை.
ப.சி. வட்டாரத்திற்கு மிக மிக நெருக்கமான தமிழக நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். இதனால் டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வைத்து சிறைவாசலில் ப.சிதம்பரத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.