மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை.. அப்படியே அலேக்காக பிடித்து.. காப்பாற்றிய பொதுமக்கள்!
டையூ-டமான்; மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை.. அப்படியே தங்களது கையில் பிடித்து பத்திரமாக காப்பாற்றி உள்ளனர் பொதுமக்கள். சமுக வலைதளங்களில் ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. டையூ-டாமனில் ஒரு குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.
அங்கிருக்கும் வீடு ஒன்றில் 3-வது மாடியில் 2 வயது குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருக்கிறது. பிறகு அந்த குழந்தை திடீரென தடுமாறி 2-வது மாடியில் உள்ள ஜன்னலில் சிக்கி கொண்டு, அப்படியே அந்தரத்தில் தொங்கிபடி இருந்துள்ளது.
இதனை கீழே இருந்தவர்களில் சிலர் கவனித்து பதறினர்.. எப்படியும் அந்த குழந்தை விழுந்துவிடும் என்று நினைத்து, குழந்தையை லாவகமாக பிடிக்க தயாரானார்கள் பொது மக்கள்..
குழந்தை மாடியில் எங்கு சரியாக விழுமோ, அந்த இடத்தில் வந்து தயாராக நின்றுகொண்டனர்
.அவர்கள் நினைத்தப்படியே’ குழந்தை கீழே விழுந்தது.
அதிஷ்டசாலியான அந்த குழந்தை காயங்கள் எதுவும் இல்லாமல் உயிர் தப்பியது. சாமர்த்தியமாக செயல் பட்ட பொதுமக்களை நாமும் பாராட்டுவோம்.