விமர்சனம்: டாணாக்காரன்

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்க, தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் ‘டாணாக்காரன்’.

காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சிதான் இந்த படம்.

இடைவேளை வரை  காட்டபப்டும்,  பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களை அதிர்ச்சி அளிக்கின்றன.

படம் முழுக்க பள்ளி மைதானமே பெரும்பாலும் காட்டப்பட்டாலும் அலுக்க வைக்காத திரைக்கதை, சிறப்பான படப்பிடிப்பு உட்கார வைத்துவிடுகிறது.

வசனங்கள் சிறப்பு.  . ‘150 வருஷமா சட்டைய கூட மாத்தாத டிபார்ட்மென்ட்டோட சட்டத்த மாத்தப்போறேனு வந்து நிக்குற’ என்பது ஒரு உதாரணம்.

பட ஆரம்பத்தில்,  ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட நடைமுறைகள் இன்னும் பழக்கத்தில் இருக்கின்றன என்பதை விரிவாக அனிமேஷனில் காண்பித்திருப்பது நல்ல யுக்தி.

தவிர அங்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், லஞ்சம் என இருக்கும் பிரச்னைகளை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தமிழ்.

காவல்துறை அதிகாரியாக ஈஸ்வர மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விக்ரம் பிரபு, கச்சிதமான நடிப்பு. லால் – வழக்கம்போல இயல்பான நடிப்பு. அதே  போல எம்.எஸ்.பாஸ்கரும் எப்போதும் போல சிறபப்பான நடிப்பை அளித்திருக்கிறார்.

நாயகி அஞ்சலி நாயர் வந்து போகிறார். தவிர, விக்ரம் பிபுவுடனான இவரது காதலில் அழுத்தம் இல்லை.

இரண்டாம் பாதிக்கு மேல் ஹீரோ – வில்லன் மோதல் என வழக்கமான சினிமாவுக்கு தாவுகிறது.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.  படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். ஜிப்ரானின் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும் பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

மொத்தத்தில் படத்தை ரசிக்கலாம்.

 

 

 

 

Related Posts