“என் படத்தை தடுத்த பிரதமர் மோடி!: நடிகர் ஆரி

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக  திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம்  திரில்லராக  உருவாகியிருக்கும்  படம் ‘சிட்தி’ ( SIDDY )

இந்த படத்தை பயஸ் ராஜ்  (Pious Raj)  எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா  கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா,  சென்னையில்  இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில்  நடிகர் ஆரி பேசியதாவது:

“நான் அரங்கின் உள்ளே வரும் போதே யாரார் வந்திருக்கிறார்கள் என  கேட்டேன் ராஜன் சார், உதயகுமார் சார் வந்திருக்கிறார்கள் என்றார்கள், அப்போ நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள் என்றேன். சி

ன்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாத போது, அப்படத்திற்கு ஜாமின் தரும் முதல் ஆட்களாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கிறார்கள். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனையும் பேசுகிறார் என்றால் அவருக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது.அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும்,  ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன்.

இந்த இயக்குனரும்  நானும் சேர்ந்து ஒரு படம் செய்வதாக இருந்தது ஆனால் அதை தடுத்தது மோடி தான், டிமானிடைசேசன் வந்தது அது படத்தை பாதித்து விட்டது.

நீங்கள் கேஜிஎஃப் ரசிகராக இருந்தாலும் ஓகே பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் ஓகே ஆனால் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் டிரெய்லரே தரமாக இருக்கிறது. அதில் உழைப்பு தெரிகிறது.  தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என ஆரி பேசினார்.

 

 

 

 

Related Posts