’’கொரோனா பீதி’’ படபிடிப்புக்கு காத்திருக்கும் புதுப் பட வில்லன்!
படங்களில் க்யூட் அப்பாவி இளைஞனாகவும் வில்லனாக சைக்கோ கொலையாளியாக தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை கொடுத்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.
தயாரிப்பாளர்; மைக்கேல் ராயப்பன்
இயக்குநர்; ரவீந்திர மாதவா
நாயகன்; அதர்வா முரளி
வில்லன்; நந்தா
நாயகி;லாவண்யா திரிபாதி
ஒளிப்பதிவு;சக்தி சரவணன்
கலை இயக்குநர்; ஐயப்பன்
இது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது…
இப்படம் ஆரம்பிக்கும்போதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். நீண்ட தேடலுக்கு பின் இறுதியாக நடிகர் நந்தா இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
அப்பாவி வில்லனாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்டவர் நந்தா. எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன். நடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மிகச்சிறந்த நடிகர் என்றார்.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.