வெளியே யாரும் வரவேண்டாம் தனுஷ் வேண்டுகோள்..!
கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பது நம்ம கையில் தான் இருக்கிறது. நம் நாட்டின் பிரதமர் கேட்டுக் கொண்டதன் படி யாரும் நாளை காலை 7மணியில் இருந்து இரவு 9மணிவரைக்கும் வெளியே யாரும் வரவேண்டாம்.
நாம் அப்படி இருப்பதால் அரசும், மருத்துவர்களும் கொரோனாவை எதிர்த்து போராடுகிறார்கள். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது நமது கடமை. மருத்துவர்கள், செவிலியர்கள்,அரசு அனைவருக்கும் நாம் உதவி செய்ய வேண்டும். அது நாம் அனைவரும் நாளை எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பது, நாம் செய்யும் பெரிய உதவியாக இருக்கும். மிகமிக அவசரம் என்றால் மட்டுமே பாதுகாப்புடன் முகக் கவசம் கையுறை அணிந்து செல்லுங்கள் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுப்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.