கொரோனாவால் திருந்திய சீனா! நாய், பூனை சாப்பிடத் தடை..!

முதன் முதலாக சீனாவில் ஊஹான் மாகாணத்திலிருந்து தனது பயனத்தை தொடங்கியது கொரோனா வைரஸ்.  தற்போது  உலகத்தையே தனது காட்டுபாட்டுக்குள் வைத்துள்ளது. அதிரடியான தனது ஆட்டத்தால் மக்களை அள்ளி சுருட்டிக் கொண்டு இருக்கிறது. அச்சுறுத்தல் காரணமாக வீட்டுக்குள் முடங்கிகிடைக்கின்றனர்.

இந்த வைரஸின் பாதிப்பால் உலகமுழுவதும் 47,249 பேர் உயிரைக்குடித்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் வைரஸ் எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பதை ஆராய்ந்ததில்  வளர்ப்புப் பிராணிகளின்  சந்தையில் இருந்து கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எறும்பு திண்ணி என்ற உயிரினதிற்கு சீனாவில் சந்தை மதிப்பு அதிகம். ஆகவே இதன் மூலமாகவே இந்த வைரஸ் பரவியாதாக கூறப்படுகிறது. அதேபோல் இங்கு வளர்ப்பு பிராணிகளை சமைத்து சாப்பிடும் வழக்கமும் உண்டு. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்த வளப்பு பிராணிகள் பட்டியலில் இருக்கும் விலங்குகளுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலில் பூனை, மற்றும் நாயை சமைத்து சாப்பிடக்கூடாது.  வரும் மே மாதம் முதல் தடைவிதிக்கப்படுவதாக சென்ஷேன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் குறித்து  சென்ஷேன் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்  ‘நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டும் செல்லப்பிராணி மனிதனிடம் பிக நெருக்கமாக  பழகுகின்றன. ஆகவே  செல்லப்பிராணிகளிடம் இருந்து வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இந்த தடை அவசியமாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்’’ சீனா ஊஹான் போன்ற பல நகரங்களில்  இந்த தடை விதிக்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.