’கொரோனா’ தனிமை படுத்தப்பட்டார் நடிகை பாவனா…!
கேரளா; திரையுலகில் அறிமுகமாகி பின் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை பாவனா. இவர் தமிழி சித்திரம் பேசுதடி படத்தில் முதன் முதலாக தமிழுக்கு அறிமுகமானவர் . பின்னர் வெயில், தீபாவளி,ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படம் வழியாக தமிழ் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார் பாவனா.
மலையாளம், தமிழ் என திரைத்துறையில் பிரபலமானார் பாவனா. பின்னர் 2010-ம் ஆண்டு கன்னட திரைப்படமான ’ஜாக்கி’ படத்தில் நடித்து கன்னடத்தில் பிரபலமானார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமாருடன் இனைந்து நடித்து கன்னட ரசிகர்களையும் தனக்குள் கட்டிவைத்தார். மலையாளம், கன்னடம் என பிஸியாக இருக்கும் போதே கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திக்குப் பிறகு பெங்களூரில் தனது காதல் கணவர் நவீனுடன் வசித்து வந்தார் பாவனா. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் இருக்கும் சொந்த ஊரான திருச்சூருக்கு செல்ல முடியாமல் தவித்தார். இந்த நிலையில் இரண்டு மாநில அரசிடமும் அனுமதி பெற்று பெங்களூரில் இருந்து சொந்த ஊரான கேரளாவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்றதும் உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிந்ததும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆகவே ஊருக்கு போனாலும் தனிமையில் இருக்கிறார் பாவனா.