மூன்று சந்தானத்துடன் ஹர்பஜன் சிங்! ’டிக்கிலோனா’ஆட்டம் ஆரம்பம்..!

வித்தியாசமான கதபாத்திரத்தில் சந்தானம் நடிப்பில் பிரம்மாண்டமான படமாக  தயாராகி வருகிறது ‘டிக்கிலோனா’. இதுவரை சந்தானம் நாயகனாக நடித்ததில் இது மாறுபட்ட கதாபாத்திரம்.இவருடன்  இப்படத்தில் இந்திய கிரிகட் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இரண்டு கதநாயகி நடிக்கின்றனர். நட்பேதுணை படத்தில் நடித்த அனகா மற்றும் ஷிரின் என இருவர் நாயகியாக நடிக்கிறார்கள்.

  நடிகர்கள்;

யோகிபாபு,

ஆனந்த்ராஜ்,

முனிஷ்காந்த்,

நிழல்கள் ரவி,

சித்ரா லெட்சுமணன்,

 மொட்டை ராஜேந்திரன், ஷாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு; கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி இணைந்து தயாரித்திருக்கிறது.

இசை; யுவன் சங்கர் ராஜா

 கேமராமேனாக ஆர்வி பணியாற்றுகிறார்.

எடிட்டராக ஜோமின் இணைந்திருக்கிறார்.

 

இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். வித்தியாசமாக கதபாத்திரத்தில் கலக்கப்போகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மூன்றாக வெளியிடவிருப்பாதாக நேற்று சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட்  லுக் நேற்று வெளியானது.

இரண்டாவது நாளான இன்றும் மற்ரொரு போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் கையில் இருக்கும் சமையல் பாத்திரத்தைக் கொண்டு  உடம்பை மறைக்க முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம்.

ஏற்கனவே சந்தானம் பதிவிட்டது போன்று இரண்டாவது போஸ்டரும் செம்மாயா வைரலாகி வருகிறது. அடுத்து மூன்றாவது போஸ்டர் நாளை வெளியாகவிருப்பாதால் எப்படி ’வரப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறார் சந்தானம்.

Related Posts