ரஜினியின் அண்ணாத்தே படம் பார்த்தவருக்கு நட்ட ஈடு, 12 ஆயிரம் ரூபாய்!
ரஜினி நடித்து 2021ல் வெளியான அண்ணாத்த திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் பெற்றதற்காக இழப்பீடு கோரியவருக்கு ரூ.12 ஆயிரம் அளிக்கும்படி திரையரங்க நிர்வாகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான உத்தரவைப் பெற்ற சமூக ஆர்வலர் கோ.தேவராஜன் தெரிவித்து இருப்பதாவது:
“கடந்த 04.11.2021 (அன்று) நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தை சென்னை காசினோ திரையரங்கில் பார்த்தேன். இதற்காக முந்தையநாள் 30/10/2021 அன்று ‘டிக்கெட் நியூ’ இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தேன். காசினோ திரையரங்கு என்னிடம் ரூபாய் 159.50 காசு வசூலித்தார்கள்.
இது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாகும். ஆகவே, சென்னை நுகர்வோர் குறைத்தீர் ஆணையர் (வடக்கு) வழக்கு தாக்கல் செய்தேன். விசாரணை செய்த ஆணைய தலைவர் கடந்த 25/11/2024 அன்று விசாரணை முடித்து தன்னுடைய உத்தரவினை பிறப்பித்தார்.
அந்த உத்தரவில் மன உலைச்சல், சேவை குறைப்பாடு இழுப்பிட்டு தொகை மற்றும் வழக்கு செலவு தொகை சேர்த்து ரூபாய் 12,000/- வழங்கிட வேண்டும் என்றும் தவறும் பச்சம் 9% சதவீதம் வட்டியுடன் மனனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்” என்று கோ. தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

