இழப்பீடு: ஏர்நெட் நிறுவனத்துக்கு உத்தரவு! நுகர்வோர் ஆணையம் அதிரடி!
வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்பட்டதால், அவருக்கு ரூ.12 ஆயிரம் அளிக்கும்படி ஏர்டெல் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கோ.தேவராஜன், ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி வந்தார். இது பழுதானது. ஏர்டெல் வாடிக்கையாளர் அலுவலருக்கு புகார் அளித்தார். புகாரை பெற்ற அலுவலர், பழுதை சரி செய்யாமலேயே, சரி செய்யப்பட்டதாக கூறி புகார் மனுவை முடித்துவைத்தார். இது குறித்து தேவராஜன் மீண்டும் மீண்டும் ஏர்டெல் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் மனம் நொந்த கோ.தேவராஜன், சென்னை (வடக்கு) மாவட்ட குறைத்தீர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். விசாரித்த ஆணையம், மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஏர்டெல் நிறுவனம்ம னுதாரருக்கு மன உளைச்சலுக்காக ரூபாய் 12.000/-ஐ இரண்டு வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 9 சதவீதம் வட்டியோடு வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஆணைய உத்தரவு:

