சீனா பொருட்களை இனி நான் பயன்படுத்த மாட்டேன்.. நடிகை சபதம்..!
சென்னை; இந்தியா சீனா எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே வன்முறை மோதல் சமீபத்தில் ஏற்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக அரசியலில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு சீனா பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலும் சீனா தயாரிப்புகளே! பெரும்பாலான பேர் உபயோகப்படுத்தும் செல்போன் மற்றும் அந்த செல்போனின் முக்கிய ஆப் டிக்டாக் அந்த டிக்டாகில் இந்த ஊரடங்கில் கிராமம் முதல் நகரவாசிகள் வரை மூழ்கியிருக்கின்றனர் என்பதே உன்மை.
இதனை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியாமா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க சீனா தயாரிப்புகளை இனி உபயோகிப்பதில்லை ! என்று நடிகை சாக்ஷி அகர்வால் கூறியிருக்கிறார்.
நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.
“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.
இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.
நடிகை சாக்ஷி அகர்வாலின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.