வரலாற்றில் இரண்டாம் முறை வெளியேறிய சென்னை மக்கள்!
சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் பலர், கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு அணி அணியாக புறப்பட்டுச் செல்வதைக் காண்கிறோம். இவர்கள், “சென்னை வட்டாரத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. தவிர ஊரடங்கு காரணமாக தொழில், வேலை இல்லை. சாப்பாட்டுக்கே சிரமமாக இருக்கிறது!” என்று இதற்குக் காரணம் சொல்கிறார்கள்.

இதே போல ஏற்கெனவே ஒருமுறை, பெரும்பாலான சென்னை மக்கள் வெளியேறியதும் நடந்தது.
அப்போது இந்தியா, வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்தது. இரண்டம் உலகப்போர் நடைபெற்ற காலம்.. இங்கிலாந்தும் ஜெர்மெனியும் எதிரெதிர் அணியில் கடுமையாக போரிட்டுக்கொண்டு இருந்தன.
1914 செப்டம்பர் 22ம் நாள்..
எம்டன் என்ற ஜெர்மானிய போர்க்கப்பல், கேப்டன் கார்ல் வான் முல்லர் தலைமையில் தென்கிழக்கு கடற்கரை ஓரமாக சென்னை நகரை நோக்கி வந்தது.
சிறிது நேரம் சென்னையின் நிலைமையை கண்காணித்த கேப்டன் கார்ல், சரியாக இரவு 09:30 மணிக்கு தாக்குதலை நடத்த உத்தரவிட்டார்.
மின்சார பயன்பாடு இல்லாத காலம் என்பதால் சென்னை நகரமே இருளில் அமைதியாக இருள் சூழ்ந்து இருந்தது. யாரும் எதிர்பாராத அந்தநேரத்தில், சென்னை கடற்கரையில் இருந்து சில ஆயிரம் அடி தூரத்தில் நின்று கொண்டு, குண்டுகளைப் பொழிந்தது எம்டன் கப்பல்.
முதலில் பர்மா எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் பல தாங்கிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின.
அடுத்ததாக எம்டன் கப்பல், சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்தது. அக்கப்பலில் இருந்த 26 மாலுமிகள் இத்தாக்குதலில் காயமடைந்தனர். குறைந்தது 5 மாலுமிகள் உயிரிழந்தனர்.
இரவு 10:00 மணி வரை இத்தாக்குதல் இடம்பெற்றது. அதன் பின்னரே பிரித்தானியக் கரையோரக் காவல் படையினர் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர்.

ஆனாலும், அதற்குள் வெற்றிகரமாக தனது தாக்குதலை முடித்த எம்டன் திரும்பி விட்டது. மொத்தம் 125 குண்டுகளை “எம்டன்” அன்றையை இரவு வீசியது.
இத்தாக்குதலால், அப்போதைய சென்னஐ (மெட்ராஸ்) நகரமே கதிகலங்கிப்போனது.
எம்டன் மீண்டும் தாக்கும் என்ற அச்சத்தில் நகரை விட்டு பலர் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர். சென்னையே காலியானது போல் தோற்றமளித்தது.
ஆனால் அதன் பிறகு, எம்டன் கப்பில் சென்னை மீது தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர்.
பலர் தங்கள் விலை மதிப்பற்ற வீடு, கட்டிடம் உள்ளிட்டவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டுச் சென்றனர். எம்டனுக்கு அஞ்சாமல் தொடர்ந்து இங்கே இருந்த அவர்கள், பெரும் சொத்துக்களுக்கு அதிபர் ஆனார்கள்.
அதன் பிறகு 105 வருடங்கள் கழித்து இப்போது சென்னை மக்கள் பெரும்பாலோர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது நடக்கிறது.
“வரலாறு திரும்புகிறது!” என்ற வார்த்தைகள் மிகவும் பிரபலம். ஆனால் இப்படி ஒரு சோக வராலறு திரும்பியிருக்க வேண்டாம்!
– டி.வி.எஸ்.சோமு, செய்தியாளர்