பாய்ந்த ‘ரெட்ஜெயண்ட்’ செண்பக மூர்த்தி! பரிசு வழங்கிய சூர்யா, சூரி, சித்தார்த் !

பாய்ந்த ‘ரெட்ஜெயண்ட்’ செண்பக மூர்த்தி! பரிசு வழங்கிய சூர்யா, சூரி, சித்தார்த் !

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XXI Chennai District Masters Athletic Championship 2024” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது.

இப்போட்டி  சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர்  எம்செண்பகமூர்த்தி, செயலாளர்  ருக்மணி, பொருளாளர் சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

மேகநாத ரெட்டிஐ.எ.எஸ். இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்கள் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ,சூரி, நடிகர் சித்தார்த், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் ஆர்.அர்ஜூன் துரை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி ஜி.கே.எம். தமிழ்குமரன் ஆனந்த் குமார்ஐ.ஏ.எஸ்., தயாரிப்பாளர் சாமுவேல் மேத்தியு, தொழிலதிபர் சூர்யபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.இன்று நடந்த போட்டியில் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவரும், ரெட் ஜெயண்ட் திரைப்பட நிறுவன நிறுவனத்தின் அதிகாரியுமான எம்செண்பகமூர்த்தியும் கலந்துகொண்டார்.  60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்ற இவர், 13.2 நொடிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்  அவர் உள்ளிட்ட மூத்தோர்கள் பாய்ந்து ஓடியதை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

பரிசு பெற்ற மற்றவர்கள்…

John Devasir Memorial Award – Life time Achievement Award – .விஸ்வாம்பரன் PU (National Master Athlete)
Daisy Victor Memorial Award – Life Time Achievement Award – கிருஷ்ணவேனி N (Longing Standing National Athlete)

Appreciation Awards to Master Athletes

பரிசு வென்றவர்கள் விவரம்:

ஆண்கள் பிரிவில் பரிசு வென்றவர்கள் – கலாநிதிஎன், ஆறுமுகம் கே, வரதன் வி
பெண்கள் பிரிவில் பரிசு வென்றவர்கள் – எஸ்தர் பிரேம பாக்கியதாய், சாந்தா சுந்தர், சியமந்தகம் எம்.கே.

சுவீடனில் ஆக்ஸ்ட் 2024ல் நடைபெற்ற World Masters Meet போட்டியில் வென்றவர்களுக்கு சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பாக, எம்.செண்பக மூர்த்தி ரொக்க பரிசு வழங்கினார். 

பரிசு வென்றவர்கள் விவரம்:

20000 ருபாய் பரிசு – ஜான்சன் ரத்தினராஜ் – 45+ Silver Medalist, Pole Vault
20000 ருபாய் பரிசு – சாந்தி சந்தோஷ் – 45+ Hammer Throw
20000 ருபாய் பரிசு – VS சின்னசாமி – 85+ – Gold 4×400 Relay, Bronze 4×100 Relay

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Posts