“வரி கட்ட முடியாது!” : வழக்கு தொடுத்த ரஜினி!

னக்கு சொந்தமான, சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கு கடந்த ஆறு மாதத்துக்கான சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமாக சென்னை கோடம்பாக்கம் பகுதியில், ராகவேந்திரா திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்துக்கான, ஏப்ரல் முதல் செப்டம்பர்  வரை  ஆறு மாத காலத்திற்கான சொத்துவரியாக, ரூ.6.5 லட்ச ரூபாய் செலுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரசீது அனுப்பியது.

இதை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு செய்துள்ளார். அதில், “கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆறு மாத காலத்தில் மண்டபம் செயல்படவில்லை. வருமானம் இல்லை. ஆகவே, இந்த காலகட்டத்துக்கு  சொத்து வரி விதித்திருப்பது சரியற்றது; இதை ரத்து செய்ய வேண்டும்!’ என  குறிப்பிட்டுள்ளார்.

Related Posts