போஸ்வெங்கட் ‘கன்னி மாடம்’ சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு!!
சென்னை; நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘கன்னி மாடம்.’தற்போது இந்த படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
‘ஈரநிலம்’ படத்தில் மூலம் அறிமுகமான போஸ் வெங்கட் 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர். நடிகராக வலம் வந்த இவர் சாதி,மற்றும் ஆணவக்கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்‘கன்னி மாடம்’ இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தற்போது ‘கன்னி மாடம்’ திரைப்படம் டொரண்டோவில் நடைபெற இருக்கும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்படுள்ளது. தமிழ் சர்வதேச திரைப்பட விழா வரும் செப்டம்பர் 11 முதல் 13 வரை டொரண்டோவில் நடைபெறவிருக்கிறது. போஸ் வெங்கட் முதல் படமான ’கன்னி மாடம்’ சர்வதேச அளவில் தேர்வாகியிருப்பது திரைப்பட குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
-யாழினி சோமு