நாய்களுடன் போராடும் ஆண்ட்ரியா!! ‘நோ என்ட்ரி’திகில்

உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சியில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அந்த படத்தின் பெயர் ‘நோ என்ட்ரி’ ஜம்போ சினிமாஸ்  சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள்ளார் .இவர் ஏற்கனவே ‘நீயா2’ படத்தை தயாரித்தவர்.  

படத்தின் இயக்கம் ஆர்.அழகு கார்த்திக்.
திகில் படமான இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில்
“மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பிரதேசத்தில் ஒரு சொகுசு இடத்தில் தங்குகிறார்கள் இளம் தம்பதிகள் .அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானையையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் நாய்களிடமிருந்து தம்பதிகள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதைப் பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் கதைதான் ‘நோ என்ட்ரி’ படம், என்கிறார்.

இப்படத்திற்காக ஆண்ட்ரியா மிகவும் தைரியசாலியாக  நாய்களுடன் போராடும் காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவுடன் வாகா படத்தின் நாயகி ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ் , ஆதவ் கண்ணதாசன்,டில்லி, கோகுல் ‘மானாட மயிலாட’ புகழ் மானஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்காகப்  15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயிற்சி அளிக்கப்பட்டு

பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஆபத்தான மலைப்பிரதேசக் காட்சிகளையும் பசுமைக் காட்டு வெளிகளையும் சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி  படமாக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு ஒளிப்பதிவு ரமேஷ் சக்கரவர்த்தி. இசை -அஜிஸ், கதை, திரைக்கதை, இயக்கம்: ஆர். அழகு கார்த்திக் .

ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

-யாழினி சோமு

Related Posts