விமர்சனம்: பொம்மை

விமர்சனம்: பொம்மை

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள படம்.. பொம்மையுடன் காதல் என்ற வித்தியாசமான கதைக்களம் எதிர்பாப்ப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா – பிரியா பவானி ஷங்கர் இணைந்து மான்ஸ்டர் எனும் ஹிட் படத்தை ஏற்கனவே கொடுத்துள்ளதால், அதே எதிர்பார்ப்பு பொம்மை மீதும் வந்தது.

கதை

சிறு வயதிலேய தாயை இழந்த நாயகன் (சிறுவன்), தன் வகுப்பு தோழி மீது ஈர்ப்பு கொள்கிறான். அவள் ஒருநாள் தொலைந்து போக, பொம்மையை அவளாக எண்ணி வாழ்கிறான். வளர்ந்தும் இந்த நிலை மாறவில்லை.  

பொம்மை வடிவமைக்கும் பணியில் ஈடுபடும் இவன் ஒரு பொம்மையை தனது சிறு வயது தோழியாக நினைத்து வாழ ஆர்பிக்கிறான்.  இதனால் என்னென்ன விபரீதங்கள் நடந்தன.. இதிலிருந்து அவர் வெளியே வந்தாரா என்பதே கதை..

கதாநாயகன் எஸ்.ஜே. சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தெரிந்தாலும், அதை கச்சிதமாக கையாண்டுள்ளார். அதே போல் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

எந்த ஒரு குறையும் இல்லாமல் அழகாக நடித்து அசத்திவிட்டார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாந்தினி தான் ஏற்ற நடித்துள்ள கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

இசை, ஒளிப்பதிவு ஓ.கே. ரகம்.

இயக்குனர் ராதாமோகன்தான் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.  வழக்கமான கதைக்களம் இல்லை என்றாலும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.  

பிளஸ்

எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பு

மைனஸ்

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை