‘பாம்’ : “சூப்பர் நடிகர் அர்ஜூன் தாஸ்!”: புகழும் ஊடகங்கள்

‘பாம்’ : “சூப்பர் நடிகர் அர்ஜூன் தாஸ்!”: புகழும் ஊடகங்கள்

விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து நேற்று வெளியான பாம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று உள்ளது. குறிப்பாக, நாயகன் அர்ஜூன் தாஸ் நடிப்பை பாராட்டி சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தையும், அர்ஜூன்தாஸ் நடிப்பையும் ஊடங்கள் பாராட்டுவதையும் பார்க்க முடிகிறது. அவற்றில் சில…

dailythanthi.com:

“ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் அசரவைத்துள்ளார், அர்ஜுன் தாஸ். காளிவெங்கட்டை மட்டுமல்ல கதையையும் சுமந்திருக்கிறார். கர்ஜிக்கும் குரலை காட்டி சாமியாடும் இடங்களில் சிலிர்ப்பு. காளிவெங்கட்டின் குணச்சித்திர நடிப்பு கவனிக்க வைக்கிறது. ‘இமேஜ்’ பார்க்காமல் நடித்ததற்கு பாராட்டலாம்.tamil.filmibeat.com
அர்ஜுன் தாஸ் நடிப்பு எப்படி?: ‘பாம்’ படத்தில் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அர்ஜூன் தாஸ் தனது வழக்கமான ஆக்சன் பாணியிலிருந்து விலகி, அப்பாவி கதாபாத்திரத்தில் புதுமையாக களமிறங்கியுள்ளார். அவரது நடிப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது.

zeenews.india.com/tamil

கிராமத்து பையனாக அர்ஜுன் தாஸிற்கு ஒரு புதுமையான கதாபாத்திரம். புதுமையான கதாநாயகன் என்றாலே அது சிறப்பு என்றாகிவிடாது அல்லவா, ஆம் அர்ஜுன் தாஸிற்கு இது சிறந்த படமில்லை. ஆனால் அதற்காக அவர் இப்படி நடிக்கவே கூடாது என்றில்லை. இதேபோன்ற புதுமையான கதாபாத்திரங்களை செய்யலாம், இன்னும் கொஞ்சம் அதற்கு தயாராகி நடித்தால் போதுமானது. வழக்கம்போல், எரிமலையாய் வெடிக்கும் காட்சியில் ‘வெறித்தனமாக’ நடித்திருக்கிறார்.

gtamilnews.com

அவரது உற்ற நண்பனாக வரும் அர்ஜுன் தாஸ் பாத்திரத்துக்குள் புதைந்து போய் இருக்கிறார். குரல் வளத்தில் இருந்து உடல் மொழி வரை அப்படி ஒரு எனர்ஜியுடன் தெரியும் அவர் இதில் அடக்கி வாசித்திருப்பது ஆச்சரியம்.

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து சாமி ஏறியது போல் ஒரு ஆட்டம் ஆடி கர்ஜனை செய்வது அற்புதம்.

அர்ஜுன் தாசின் வசீகர குரலை வைத்தே “உன் குரலை வைத்து நீ முன்னெடுத்தால் இந்த ஊர் மக்கள் ஒன்றுபடுவார்கள்…” என்று காளி வெங்கட் பேசும்போது கைத்தட்டல்களால் தியேட்டர் நிறைகிறது.

tamilankural.com

அர்ஜூன்தாஸ், ஆக்சனில் இருந்து அப்பாவி கேரக்டருக்கு பிரமோசன் ஆகி இருக்கிறார். ஆம்.. அதிரடி வில்லனாக மட்டுமல்ல.. அற்புதமான குணச்சித்திர பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த நாயகன்.

வழக்கமாக இவர், வில்லன் கதாபாத்திரத்தில் கண்களாலும், குரலாலுமே மிரட்டி விடுவார். அதே நேரம், ரசவாதி திரைப்படத்தில் வேறு ஒரு தளத்துக்கு தனது நடிப்பை உயர்த்தினார். இதில், அப்பாவி வேடம். அதையும் சிறப்பாக செய்து இருக்கிறார்.அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி… சாமி ஆடுவது, அதன் பிறகு குடும்பத்தாரிடம் உண்மையைச் சொல்வது… சிறப்பான நடிப்பு. வாழ்த்துகள் அர்ஜூன்தாஸ்.

 

Related Posts