“அசத்திய அர்ஜூன் தாஸ்!”: கொண்டாடும் ரசிகர்கள்!
வித்தியாசமான குரல் வளம், மிரட்டும் நடிப்பால் ஏற்கெனவே ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் அர்ஜூன் தாஸ். இன்று அவர் நாயகனாக நடித்துள்ள பாம் படம் வெளியாகி பாசிடிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
படத்தின் பல அம்சங்கள் ரசிகர்களாக பாராட்டப்பட்டாலும், எக்ஸ்ட்ரா பாராட்டுக்களைப் பெற்று வருவது, அர்ஜூன்தாஸின் நடிப்புதான்.
அதற்குக் காரணம் உண்டு..
‘கைதி’ படத்தில் வித்தியாசமான வில்லனாக மிரட்டி இருந்தார். தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களிலு் இது தொடர்ந்தது.
அதே நேரம், ‘அநீதி’, ‘ரசவாதி’ போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்தார். அவையும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள பாம் படத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு முழு ஹீரோவாகவே மாறி உள்ளார் அர்ஜுன் தாஸ்.
முகபாவம், உடல் மொழியில் மட்டுமல்ல.. தனது குரலிலும் கிராமத்து இளைஞனுக்கான வீரியத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்.
“அட.. கேங் லீடர், சீரியஸான நாயகன் என்றெல்லாம் வந்த அர்ஜூன்தாஸா இது” என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
காரணம்.. இந்தப் படத்தில் பயந்து நடுங்கும் அப்பாவியாக, நகைச்சுவையை வெளிப்படுத்தும் படியாக நடித்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் அவர்.
“எந்த வேடத்திலும் அசாத்தியமாக நடிப்பேன்” என்பதை பாம் படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் அர்ஜூன் தாஸ் என்கிறார்கல் ரசிகர்கள்.
ஆம்.. முந்தைய படத்தில் இருந்த எந்த ஒரு சாயலையும் இதில் வெளிப்படுத்தவில்லை.
சமீபத்தில் வெளியான, குட் பேட் அக்லி படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நடனம் ஆடிக்கொண்டே என்ட்ரி கொடுத்ததும், பிரியா வாரியருடன் இணைந்து நடனமாடியதும் இணையத்தில் வைரல் ஆனதே.. அவர்தானா இது.. என்று ஆச்சரியப்படுகிறார்கள் ரசிகர்கள்.
அந்த அளவுக்கு கிராமத்து இளைஞனை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
இந்தப் படம் வெளியாகும் முன், “நான் நடித்த படங்களிலேயே மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சவாலான அனுபவத்தை கொடுத்தது இந்த பாம் படம்தான்” என்று பேசி இருந்தார் அர்ஜுன் தாஸ்.
அது உண்மை என்பதை இன்று வெளியாகி நிரூபித்து உள்ளது பாம் திரைப்படம்.
உயிரற்ற நண்பனின் தலை கவிழ, பதறித் துடித்து நடுங்கும் கைகளால் பிடிப்பது, “கதிர் சாகலம்மா.. கதிருக்கு ஒண்ணும் இல்லேம்மா” என்று தனது கனத்த குரலை மெலிதாக்கி குரலிலும் நம்மை ஆட்கொண்டது, நண்பனின் உடலுக்கு எதிரே குந்திக்கால் போட்டு அமர்ந்து பார்க்கும் பார்வை, “நீங்க யாரும் கோச்சுக்கலேன்னா ஒரு உண்மையைச் சொல்றேன்..” என குடும்பத்தாரிடம் தயங்கித் தயங்கி சொல்வது.. இப்படி அர்ஜூன் தாஸ் நடிப்புக்கான காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
சுருக்கமாகச் சொன்னால் அவரது திரையுலகப் பயணத்தில் இத்திரைப்படம் ஒரு மைல் கல்.
தான் கமர்சியல் ஹீரோவாகவும், தரமான நாயகனாகவும் ஒருங்கே இருக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கறார் அர்ஜூன்தாஸ்.
வாழ்த்துகள்.!
