விமர்சனம்: பர்த் மார்க்  

விமர்சனம்: பர்த் மார்க்  

1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் பங்கு பற்றிய இந்திய ராணுவ அதிகாரிகள் சிலருக்கு Post War Trauma எனும் தற்காலிக மன அதிர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது.  இத்தகைய பாதிப்பில் உள்ள நாயகன் தன் மனைவி மீது அன்பு செலுத்துகிறான். ஆனால் கர்ப்பிணியான அவள், தனது குழந்தையைத்தான் சுமக்கிறாளா என்கிற சந்தேகம், நாயகனுக்கு.

இதற்கிடையே இயற்கையான முறையில் பிரசவத்தை நிகழ்த்தும் தனியார் இயற்கை மருத்துவ கிராமத்திற்கு மனைவியை அழைத்துச் செல்கிறான் நாயகன். அங்கு அவன், தனத் மன அதிர்ச்சிக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே, தன் மனைவியையும் அன்பாக கவனித்துக் கொள்கிறான். ஆனாலும் சந்தேகம் தொடர்கிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

 

 

படத்தை எடுத்த விதத்துக்காகவே இயக்குநரை பாராட்டலாம். ராணுவ அதிகாரியின் கதை என்றாலே அதிரடி, வீரதீர சாகசம் என்றுதான் இருக்கும். ஆனால், அந்த ராணுவ அதிகாரிக்கு ஏற்பட்ட மன நிலை மாறுபாடு அதனால் ஏற்படும் விளைவுகள் என வித்தியாசமாக முயற்சித்து இருக்கிறார் இயக்குநர்.

அதோடு, இயற்கை முறையிலான பிரசவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

பிரம்மாண்டமான குளியல் தொட்டிக்குள் சௌகரியமாக அமர்ந்து இயற்கையான முறையில் பிரசவத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை  பலரும் அறியாதது.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிர்ணா- கர்ப்பிணி பெண்ணாகவே நடிப்பு தன் திறமையை நிரூபித்திருக்கிறார். டான்சிங் ரோஸாக ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் ஷபீர்- கதையின் நாயகனான டேனியல் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

நடிகர், நடிகைகளின் நடிப்பை கடந்து, படத்தின் ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும், இசையமைப்பாளரும் இணைந்து படத்தை ரசிக்க வைக்க இஷ்டப்பட்டு கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் பர்த்மார்க் – சிறப்பான படம்.