பிக் பாஸ் சீசன்4… ரூ 1 கோடி!! அக்ரிமெண்ட் போட்ட பிரபல நடிகை!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ் சீசன் 4 தொடங்கயுள்ளது. இதையும் அவரே தொகுத்து வழங்குகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ பிரொமோ சில நாட்களுக்கு முன் வெளியானது. பல பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு டீலிங் பேசி இருக்கிறார்.
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக ஏகப்பட்ட வருமானத்தை அள்ளிக்குவிக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் முதல் அதில் பங்கேற்கும் 15 போட்டியாளர்களுக்கும் தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழக்கப்படுகிறது.
பிரொமோவில் எதிர்பார்த்தபடி கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் தோற்றினார். பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளர்களாக 15 பேர் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் நடிகை ஒருவர் கேட்ட சம்பளம் தான் தற்போது பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.சீசன் 3-ல் கலந்து கொண்ட பிரபலசினியர் நடிகைகள் மும்தாஜ், நமிதா, ஷெரின் பொன்றே. இந்த முறையு சீனியர் நடிகை கிரண் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சீசனில் பங்கேற்க விஜய் டிவி பிரபலங்களும் போட்டி போவதாகவும் கூறுகின்றனர். அந்த வரிசையில் மணிமேகலை, மற்றும் ஷிவானி ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை.
சரி ஒரு கோடி மேட்டருக்கு வருவோம்.இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். கவர்ச்சியாக இருக்கும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தது விஜய் டிவி நிர்வாகம். பேச்சு வார்த்தையில் அந்த இளம் நடிகை ரூ. 1 கோடி சம்பளம் கொடுத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதாக கூறியுள்ளார்.
அதற்கு ஒப்பு கொண்டு அக்ரிமெண்ட் போட்டு விட்டதாம் விஜய் டிவி நிர்வாகம். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக ரசிகர்களை கவர வருகிறார் ஷில்பா.
-யாழினி சோமு