காதலருடன் ஓணம்!! கலக்கும் கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் தெரிக்க விடும் நடிகைகள்..!
கேரளம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என பலரும் தங்களது பக்கத்தில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
கொரோனா காலத்திலும் அவர்களது இல்லத்திலிருந்து மகிழ்ச்சியுடன் அத்திப்பூ கோலம்,பாரம்பரிய ஆடையுடன் கூடிய அறுசுவை உணவுகளுடன் கொண்டாடினர்.
நடிகைகள் பலரும் தங்களின் ஓணம் கொண்டாத்தை படம்பிடித்து ட்விட்டரில் ஷேர் செய்து ரசிகளுக்கு விருந்து கொடுத்துள்ளனர். சாய் பல்லவி, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, ரம்யா நம்பீசன், முக்தா பானு உள்ளிட்ட பலரும் தங்களின் ஓணம் ஸ்பெஷல் போட்டவை ஷேர் செர்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவன் மற்றும் தாயுடன் ஓணம் திருநாளை கொண்டாடினார். அவரது புகைப்படம் தான் ட்விட்டரில் முதல் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் கொண்டாடினார்.
-யாழினி சோமு